ஒரு புல்லட்... ஒரு பயணம்... - நான்கு வருடங்கள்! | Interview With Bike rider Kedarnath - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஒரு புல்லட்... ஒரு பயணம்... - நான்கு வருடங்கள்!

பயணம் - ஹிமாலயன் - ராயல் என்ஃபீல்டுஇரா.கலைச்செல்வன் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘‘பிராக் எனும் நாட்டில், அந்த நள்ளிரவு நேரத்தில், எங்கே போவது என்று தெரியாமல் நின்றிருந்தபோது, எனக்குத் தங்க இடம் கொடுத்த அந்தத் தாத்தா, பாட்டி... கையில பத்துப் பைசாகூட இல்லாதபோது, எனக்குச் சாப்பாடு போட்ட அந்த தாபா அண்ணன்... பல இடங்களில் சாலையோரத்தில் பொருள்களுடன் நான் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும்போது, எந்தப் பொருளையுமே திருடாத திருடர்கள்... இப்படி இவர்கள் எல்லோரும்தாம் என்னைத் தொடர்ந்து பயணிக்கவைக்கிறார்கள். என் மொழியில் பயணம் என்றால், மனிதர்கள் என்று அர்த்தம்...”

தன்னுடைய ஹிமாலயனில் அந்த ஆரஞ்சு நிறப் பையை, சிவப்பு நிற ரோப் கொண்டு கட்டியபடியே பேசத் தொடங்கினார் கேதர்நாத். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட கர்நாடகவாசி. இன்ஜினீயர் வேலையைத் துறந்துவிட்டு, கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்ட பயணி. இன்று ஹிமாலயன் பைக்கை எடுத்துக்கொண்டு, உலகம் முழுக்க சுற்றக் கிளம்பியிருக்கிறார். பயணத் திட்டத்தின் காலம், நான்கு வருடங்கள். சென்னையில் நடந்த அவரது உலக சுற்றுப் பயணத்தின் துவக்கவிழா சமீபத்தில் நடந்தது. அதில் அவரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick