செல்லமான மிருகம்!

ஃபர்ஸ்ட் லுக் - மெர்சிடீஸ் பென்ஸ் AMG GT R ராகுல் சிவகுரு

ந்த ஆண்டு தொடர்ச்சியாக AMG கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திவருகிறது, மெர்சிடீஸ். AMG GT Roadster (2.19 கோடி ரூபாய், எக்ஸ்-ஷோரூம்) மற்றும் AMG GT R கூபே (2.23 கோடி ரூபாய், எக்ஸ்-ஷோரூம்) ஆகிய இரண்டு ஹை-பெர்ஃபாமென்ஸ் AMG கார்களை அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது.

கிரீன் ஹெல் (Green Hell) என ரேஸ் ரசிகர்களால் அழைக்கப்படும் நர்பர்கிரிங் டிராக்கில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில், GT3 காருடன் பங்கேற்றுப் பட்டம் வென்றது மெர்சிடீஸ். மேலும், சவாலான நர்பர்கிரிங் ரேஸ் டிராக்கில், ’ரியர் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்டதில் வேகமான கார்’ என்ற சாதனையையும் படைத்திருக்கிறது மெர்சிடீஸ். இப்படிப்பட்ட GT3 காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் GT R கார் மட்டும் சோடை போகுமா? டெல்லியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில், AMG டிரைவரான கிறிஸ்டியன் ஹெஹெனடல் Christian Hohenadel, இந்த காரை ஓட்டினார். 5.14 கி.மீ தூரம் கொண்ட ஒரு லேப்பை, வெறும் 2.09.853 நிமிடங்களில் கடந்ததால், புத் சர்க்யூட்டில் புதிய லேப் ரெக்கார்டைப் படைத்திருக்கிறது மெர்சிடீஸ் AMG GT R. இவ்வளவு வேகத்துக்கும், அந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 4.0 லிட்டர், ட்வின் டர்போ, V8 பெட்ரோல் இன்ஜின்தான் காரணம். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், 585bhp பவர் மற்றும் 70kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. எனவே, 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 3.6 விநாடிகளிலேயே எட்டிப்பிடிக்கும் AMG GT R, அதிகபட்சமாக 318 கி.மீ வேகம் வரை செல்லும் என்கிறது மெர்சிடீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick