ஆடிப் பார்க்கலாம்!

எக்ஸ்பீரியன்ஸ் டிரைவ் - ஆடிவேல்ஸ் - படங்கள்: க.பாலாஜி

கஸ்ட் மாதத்தின் மழைநாள் ஒன்றில்... திருவள்ளூரில் இருக்கும் வாப்கோ டெஸ்ட் டிராக் பளிச் என்று படுசுத்தமாகக் காட்சியளித்தது. காரணம், மழை மட்டுமல்ல. ஆடியின் பரவச டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் பொருட்டு, ரேஸ் டிராக் முழுதும் சிவப்பு நிறப் பதாகைகளாலும், தோரணங்களாலும் அலங்கரித்திருந்தார்கள். ஆடி கார்களை ஓட்டுவதற்கும் பயணிப்பதற்கும், எந்த அளவுக்கு சொகுசாக இருக்கும் என்பதைச் சொன்னாலோ, படித்தாலோ, பார்த்தாலோ தெரிவதைவிட, ஓட்டியும் பயணித்தும் பார்த்தால்தான் முழுமையாகப் புரியும். அதுவும் குடும்பத்தோடு இந்த சுகானுபவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது  ஆடி.  வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களுக்கும் அந்த அனுபவத்தை ருசிக்க, ஆடி நம்மையும் அழைத்திருந்தது. A3, A4, A6 போன்ற செடான் கார்களுக்குத் தனியாக ஒரு டிராக்.  Q3, Q5, Q7 ஆகிய எஸ்யூவிகளுக்கு வேறு ஒரு டிராக். RS6, RS7, R8 போன்ற ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் TT கூபேவுக்கு ஒரு டிராக் என்று விதவிதமான டிராக்குகளை அமைத்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick