மெர்சலான காரும்... விவேகமான காரும்!

டீசல் போட்டி - டாடா நெக்ஸான் VS மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸாதமிழ் - படங்கள்: ஆ.முத்துக்குமார்

காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் பல நன்மைகள் உண்டு. நான்கு மீட்டருக்குக் குறைவாக இருப்பதால், வரி குறையும்; அதனால், விலை குறையும். உள்ளே... பெரிய எஸ்யூவிபோல பெரிதாக இருக்கும். பார்க்கிங்கில் இடத்தை அடைக்காது. எஸ்யூவி என்கிற அந்தஸ்தைப் பெற்றிருப்பதால், செடான்களைவிட கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருக்கும்; எனவே, ஆஃப்ரோடிங் திறனும் இருக்கும். இதனால்தான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி பிரெஸ்ஸா, ரெனோ டஸ்ட்டர் போன்ற கார்கள் பல்ஸ் எகிறவைக்கின்றன. ‘இந்த நான்கு மீட்டர் போட்டியில், டாடா ஏன் இடம் பெறவில்லை’ என்கிற கேள்விக்குப் பதிலாக வந்துள்ளது, நெக்ஸான். லேட்டாகத்தான் வந்திருக்கிறது; ஆனால், செம டேஸ்ட்டாக வந்திருக்கிறது நெக்ஸான். சென்ற இதழில், அசத்தல் என்ட்ரி கொடுத்த நெக்ஸானின் டெஸ்ட் ரிப்போர்ட் படித்திருப்பீர்கள். ஸோலோவாகக் கலக்கிய நெக்ஸானை, மாருதியின் ‘விட்டாரா பிரெஸ்ஸா’வுடன் ஒரே சமயத்தில் களம் இறக்கினால் என்ன?

போட்டி ஆரம்பம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick