ஆன் ரோடு விலை... என்னென்ன இருக்கின்றன? | What does on road costs include? - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஆன் ரோடு விலை... என்னென்ன இருக்கின்றன?

கார் - ஆன் ரோடு விலைராகுல் சிவகுரு

நீங்கள் புதிதாக கார் வாங்கும் முடிவில் இருக்கிறீர்களா... உங்களுக்குப் பிடித்தமான கார் எது? உதாரணத்துக்கு, ஹோண்டாவின் WR-V காரை எடுத்துக் கொள்வோம். அதன் விலை, விளம்பரத்தில் 9.99 லட்சம்* எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து உற்சாகமடைந்து, விருட்டென ஹோண்டா ஷோரூமுக்குக் கிளம்பிச் சென்றால், அங்கே நாம் பார்த்த காரின் விலை 11.5 லட்சம் எனச் சொல்வார்கள்!  ‘‘என்ன, விளம்பரத்தில் பார்த்ததைவிட 1.5 லட்சம் ரூபாய் அதிகமா இருக்கே?’’ என சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்விடம் கேட்டால், அவர் அதற்கு அந்த காரின் Quotation-ஐ உங்கள் கையில் கொடுப்பார்; அதில் கூடுதல் விலைக்கான காரணத்தைத் தனித்தனியாக விளக்கியிருப்பார்கள். ஆனால், அதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் கட்டாயமானவையா, உண்மையானவையா, இல்லை, டீலர் நம்மை ஏமாற்றுகிறாரா போன்ற குழப்பம் ஏற்படும். இந்தக் குழுப்பம் தீர என்ன வழி?

எக்ஸ் ஷோரூம் விலை: பதிவுத் தொகை, சாலை வரி, இன்ஷூரன்ஸ் போன்ற விஷயங்கள் ஏதும் இல்லாமலிருப்பதே எக்ஸ் ஷோரூம் விலை. இது உற்பத்தி ஆலையில் காரின் மதிப்பு, ஜிஎஸ்டி, டீலரின் லாபம் ஆகியவை மட்டுமே உள்ளடங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick