மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

ராயல் என்ஃபீல்டுக்குப் போட்டியாக பஜாஜ் - ட்ரையம்ப் கூட்டணி!

‘டுகாட்டியை வாங்கியது பஜாஜ்’ என்ற அதிரடியான அறிவிப்பை பைக் ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ட்ரையம்ப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறது பஜாஜ். உலகளவில் ஓட்டுவதற்கு ஸ்போர்ட்டியான, சொகுசான பைக்குகளைத் தயாரிக்கும் மிகச் சில நிறுவனங்களில் ட்ரையம்பும் ஒன்று. இந்தியாவில் ஏற்கெனவே பல்ஸர், டியூக், RC போன்ற என்ட்ரி லெவல் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளை பஜாஜ் தயாரித்து விற்பனை செய்வதால், சொகுசான ஓட்டுதலைக்கொண்ட க்ரூஸர் பைக்குகளைத் தயாரிப்பதற்காக, ட்ரையம்ப் நிறுவனத்துடன் இணைந்துள்ளது பஜாஜ். ஆனால், க்ரூஸர் & டூரர் பைக் செக்மென்ட்டில், அவென்ஜர் மற்றும் டொமினார் பைக்குகளை பஜாஜ் பொசிஷன் செய்திருந்தாலும், அது ட்ரையம்ப் நிறுவனத்தின் போனவில்லி, த்ரக்‌ஸ்டன் பைக்குகளைப்போன்ற சொகுசான ஓட்டுதலைக்கொண்டது இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இதனாலேயே இவற்றின் விலை அதிகமாக இருந்தாலும் (ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் ஆன் ரோடு விலையே 8.4 லட்ச ரூபாய்) உலகளவில் அவை நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. எனவே, 400-600சிசி செக்மென்ட்டில், இந்தியச் சாலைகளுக்கேற்ற மிட் சைஸ் பிரீமியம் பைக்குகளை, இக்கூட்டணி விரைவில் வெளியிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick