மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்ராகுல் சிவகுரு

``எனக்கு ஹூண்டாயின் i20 மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் எலீட், ஆக்டிவ் எனும் இரண்டு மாடலில், எதை வாங்குவது என்பதில் குழப்பம். என்னைத் தெளிவுபடுத்தும் பதில் எதிர்பார்க்கிறேன்.’’

- சம்பத், இமெயில்.

``பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் இருக்கும் ஸ்டைலான கார்களில் ஒன்று, எலீட் i20. ஒவ்வொரு மாதமும் கார் விற்பனையில், மாருதியின் பெலினோவுக்குக் கடும் சவாலை அளித்துவரும் இந்த காரில் நவீன டிசைன், கேபின் தரம், டீசல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ், எளிதான ஓட்டுதல் ஆகியவை இருக்கின்றன. `கார் காம்பேக்ட்டாக இருக்க வேண்டும். பார்க்க எஸ்யூவி போலவும் இருப்பது அவசியம்’ என்பவர்களுக்காக வெளிவந்ததுதான் i20 ஆக்டிவ். இது க்ராஸ்ஓவர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், i20 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக்கொண்டே இது தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டுக்கும் ஒற்றுமைகள் அதிகம். ஆனால், i20 ஹேட்ச்பேக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது டெஸ்ட்டிங்கில் இருப்பதால், கொஞ்சம் காத்திருப்பது நல்லது. அப்படி உங்களுக்கு கார் உடனடியாகத் தேவை என்றால், ஹோண்டாவின் WR-V காரை நீங்கள் பரிசீலிக்கலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick