ஃபார்முலா கார் ரேஸில் - இந்தியாவின் சின்னப்பொண்ணு! | Mira Erda first female Indian driver to race in Euro JK series - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஃபார்முலா கார் ரேஸில் - இந்தியாவின் சின்னப்பொண்ணு!

பேட்டி - கார் ரேஸர்தமிழ்

மீராவுக்கு அப்போது 8 வயது. குஜராத் மாநிலம் வதோதராவில் 3-ம் வகுப்பு படிக்கும் குட்டிப் பாப்பா. ஒரு விடுமுறை நாளில், புனேவில் உள்ள ஒரு கோ-கார்ட் -ட்ராக்குக்குக் குழந்தை மீராவைக் கூட்டிச் சென்றார் அவரின் தந்தை கிரித். ‘‘கார் இவ்வளவு ஸ்பீடா போகுமா டாடி?’’ என்று மழலை மாறாமல் கேட்டார் மீரா. ‘‘நீகூட ஸ்பீடா கார் ஓட்டலாம்...’’ என்று ஒரு கோ-கார்ட் காரில் உட்கார வைக்கப்பட்டாள். கார் டிரைவிங்கில் மீராவுக்கு அதுதான் முதல் அனுபவம்.

மீராவுக்கு இப்போது வயது 17. ‘இந்தியாவின் முதல் ஃபார்முலா கார் ரேஸர்’ என்று கூகுளில் டைப் செய்தால், நரேன் கார்த்திகேயனுக்குப் பிறகு மீரா எர்தாவின் பெயர்தான் வரும். டீன் ஏஜில் இருக்கும் மீராதான், இந்தியாவின் குறைந்த வயதில் ஃபார்முலா கார் ரேஸ்களில் கலந்துகொள்ளும் ஒரே பெண். ‘‘என்னோட அகராதியில் மூன்றே வார்த்தைகள்தான் - வேகம்... கார்... லூயிஸ் ஹாமில்டன். இவைதான் நான் இந்த கார் ரேஸைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம். பைக்கைவிட கார் ரேஸில்தான் த்ரில் அதிகம்!’’ என்று சொல்லும் மீரா எர்தா - ஹைதராபாத், கோவை, புனே, சென்னை என்று பல ரேஸ் டிராக்குகளில் கார் ரேஸில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், போடியமும் ஏறிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick