வேகம் மட்டும் முக்கியம் இல்லை!

ரேஸ் - ஹோண்டா ரேஸிங் அகாடமிராகுல் சிவகுரு - படங்கள்: வ.யஷ்வந்த்

ம் ஊரின் நெரிசலான சாலைகளில் பைக் ஓட்டும் ஒருவர், ரேஸ் டிராக்கில் அல்லது ஒரு ரைடிங் அகாடமியிடம் பயிற்சி பெற்றால் எப்படி இருக்கும்? இதனால் அவர் பைக் ஓட்டும் முறையில் வித்தியாசம் ஏற்படுமா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை, ஹோண்டாவின் டென் 10 ரேஸிங் அகாடமி (HTRA) எனக்கு அளித்தது! சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில், கடந்த ஆகஸ்ட் 2, 3, 4 ஆகிய தேதிகளில், மீடியா பிரிவுக்கான பயிற்சி முகாமை நடத்தியது ஹோண்டா.

ரேஸ் டிராக்கில், வேகமாக பைக் ஓட்டினால்தான் வெல்ல முடியும் என, நான் இவ்வளவு நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். அது முற்றிலும் தவறு என்பது, ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டியபோதுதான் தெரிந்தது. அதாவது, ரேஸ் டிராக்கில் அனைவரும் ஒரே விதமான பைக்கையே ஓட்டுவதால், பைக்கைச் சரியான ரேஸ் லைனில் ஓட்டும் முறை, திருப்பங்களில் பிரேக் பயன்படுத்தும் முறை, ரைடிங் பொசிஷன் எனப் பல விஷயங்களில் ஒரு ரைடர் செயல்படுவதைப் பொறுத்தே, ரேஸ் டிராக்கில் அவரின் வெற்றி வாய்ப்பு அமையும் என்பதைப் புரிந்துகொண்டேன். இது படிக்கும்போது எளிதானதாகத் தெரிந்தாலும், அந்த உத்திகளை ரேஸ் டிராக்கில் எப்படி, எங்கே பயன்படுத்துகிறோம் என்பதற்குத்தான், ஹோண்டா டென் 10 ரேஸிங் அகாடமியின் பயிற்சி உதவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick