சென்னை to சுண்ணாம்பாறு - புதுச்சேரியில் ஆஸ்திரேலியக் கடற்கரை!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - மாருதி டிசையர் (டீசல்)தமிழ் - படங்கள்: அ.குரூஸ்தனம்

 இளையராஜாவின் பாட்டு கேட்கும்போது தானாக உதடசைவதுபோல் மாருதியின் டிசையரைப் பார்த்ததும் தானாக ஒரு மயக்கம் வந்துவிடும். ஜாகுவார் ‘F’ டைப் ஸ்டைலில் கிரில், டைமண்ட் கட் அலாய் வீல், புரொஜெக்டர் DRL, ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், அதிகப்படுத்தப்பட்ட பூட்/சீட் இடவசதி என்று முன்பைவிட, அந்த மயக்கம் கூடுதலாகிவிட்டது. புதிய டிசையர் பிறந்து மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை; ஓடோமீட்டர் 1,800 கூடத் தாண்டியிருக்கவில்லை; ‘அண்ணா, கிரேட் எஸ்கேப்புக்காகத்தான் டிசையரே வாங்கினேன்’ என்று புதிய டிசையர் படத்துடன் பத்துத் தடவைக்குமேல் வாட்ஸ்-அப் செய்தார் நவீன்.

எஸ்ஆர்எம்-மில் இன்ஜினீயரிங் படிக்கும் நவீனுக்கு, பல்ஸருக்குப் பிறகு ஜாக்பாட்டாகக் கிடைத்தது ஸ்விஃப்ட் டிசையர். முதல் சர்வீஸ்தான் முடிந்திருக்கிறது. ‘‘காலேஜுக்கு அடிக்கடி லீவு எடுக்கிறது(!) எனக்குப் பிடிக்காது. சட்டுனு முடியிற மாதிரி கிரேட் எஸ்கேப் போயிட்டு வந்துடலாம்’’ என்றவர், தன் பெரியப்பா மகனான இன்னொரு நவீனுடன் மடிப்பாக்கத்திலிருந்து கிளம்பத் திட்டம் போட்டே விட்டார் நவீன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick