டயர்களின் வகைகள் எவை?

தொழில்நுட்பம் - டயர்ராகுல் சிவகுரு

ரு பொருளுக்கான தேவை ஏற்படும்போதுதான், அதற்கான கண்டுபிடிப்பு உதயமாகிறது. குதிரையால் இழுக்கப்பட்ட சாரட் ஊர்திகளுக்கு மாற்றாக உருவானவைதாம்  மோட்டார் வாகனங்கள். ஆரம்பக் காலங்களில் அவற்றின் வேகம் குறைவாக இருந்ததால், குதிரை ஊர்திகளில் பயன்படுத்தப்பட்ட மரத்தால் ஆன வீல்களையே மோட்டார் வாகனங்களிலும் பொருத்தினார்கள். ஆனால், நாளடைவில் வாகனங்களில் வேகமும் சொகுசும் முக்கியத்துவம் பெற்றதால், Pneumatic வகை டயர்களுக்கான தேவை ஏற்பட்டது.

அயர்லாந்தைச் சேர்ந்த John Boyd Dunlop என்பவர், 10 வயது மகனுடன் சைக்கிளில் செல்லும்போது, மோசமான ஓட்டுதல் காரணமாக அவன் தொடர்ந்து தலைவலிக்கு உட்படுவதைக் கவனித்தார். இதைத் தொடர்ந்து வெளிவந்ததுதான் Tread Pattern உடனான டயர்கள்! கால மாற்றத்துக்கு ஏற்ப இதிலும் புதுமை புகுத்தப்பட்டு, ரேடியல் டயர், டியூப்லெஸ் டயர், ரன் ஃப்ளாட் டயர், ஏர் லெஸ் டயர் எனப் புதிய டயர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. இப்படிப் புதுப்புதுத் தொழில்நுட்பங்களால், டயர்கள் பஞ்சர் ஆகும் தன்மை குறைந்துள்ளதால், அவற்றின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்திருக்கிறது. மேலும், அதிக எண்ணிக்கையில் அவை தயாரிக்கப்படுவதால், விலையும் முன்பைவிடக் குறைந்திருக்கிறது. தற்போது கமர்ஷியல், பாசஞ்சர் என செக்மென்ட்டுக்கு ஏற்ப டயர்கள் விற்பனையாகின்றன. அவற்றில் என்னென்ன ரகங்கள் இருக்கின்றன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick