ACCESSORIES

ஆக்சஸரீஸ் : கார்/பைக் தமிழ்

தை HUD என்றும் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால், தலைக்கு மேல் உள்ள டிஸ்ப்ளே என்று அர்த்தம். இது ஒரு டிரான்ஸ்பரன்ட் டிஸ்ப்ளே. அதாவது, நீங்கள் கார் ஓட்டிக்கொண்டே, உங்கள் பார்வையை சாலையிலிருந்து விலக்காமல், படித்துக்கொள்ளக்கூடிய ரீடிங்குகளுக்குப் பெயர் ஹெட்-அப் டிஸ்ப்ளே. விமான ஓட்டிகளுக்கான வசதி இது. இப்போது காரோட்டிகளுக்கும் வந்துவிட்டது.

கார் ஓட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்... கார் எவ்வளவு வேகத்தில் போகிறது... எரிபொருள் எவ்வளவு உள்ளது போன்ற விஷயங்களை உங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் கவனிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு விநாடியாவது சாலையில் இருந்து கண் பார்வையை எடுத்துத்தான் ஆக வேண்டும். ஹெட்-அப் டிஸ்ப்ளேவில் இந்தப் பிரச்னை இருக்காது.

உங்கள் கண் பார்வையின் வசதிக்கேற்ப காரின் விண்ட் ஷீல்டிலோ, ஸ்டீயரிங் பக்கத்திலோ இந்த ஹெட்-அப் டிஸ்ப்ளேவைப் பொருத்திக்கொள்ளலாம். டிரான்ஸ்பரன்ட் என்பதால், வெளிச்சாலை தெரிவதில் எந்த சிக்கலும் இருக்காது.

காரின் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் தெரியும் அத்தனை விஷயங்களையும் இதில் பார்த்துக்கொள்ளலாம். நேவிகேஷன் சிஸ்டத்தையும், ஸ்டீரியோ போன்ற ஆப்ஷன்களையும் இதிலேயே உபயோகிக்கவும் முடியும்.

ராணுவ வாகனங்களில் நேவிகேஷன் மற்றும் டார்கெட்டிங் போன்ற விஷயங்களுக்குப் பெரிதும் பயன்படுவது இந்த ஹெட்-அப் டிஸ்ப்ளேதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்