கண் அசந்தால்கதறும்! - இது பென்ஸ் டெக்னாலஜி!

தொழில்நுட்பம் - அட்டென்ஷன் அசிஸ்ட்தமிழ்

பெரும்பான்மையான கார்கள் இப்போது எலெக்ட்ரானிக் மயமாகிவிட்டன. காரின் சாவியில் ஆரம்பித்து... பிரேக்ஸ், காற்றுப் பைகள், ரிவர்ஸ் கேமரா என பம்பர் டு பம்பர் எல்லாம் சென்ஸார் மயம். சில லக்ஸூரி கார்கள் - டயர்களில் காற்று இறங்குவது; இன்ஜின் ஆயிலின் மசகுத் தன்மை வரை எல்லாவற்றையும் சென்ஸார் செய்து, ஸ்கிரீனில் காட்டும். அந்த வகையான ஒரு எலெக்ட்ரிக் சிஸ்டம்தான் இந்த அட்டென்ஷன் அசிஸ்ட்.

கார் ஓட்டுவது சிலருக்கு ஜாலியான ஹாபி; வேறு சிலருக்கு அதுதான் வேலை. ஜாலிக்கு கார் ஓட்டுபவர்களுக்கு, கொஞ்ச நேரத்தில் ஸ்டீயரிங் பிடிப்பது போர் அடித்துவிடும். சட்டென டயர்டு ஆகிவிட வாய்ப்புண்டு. அவர்கள் காரை நிறுத்தி ரெஸ்ட் எடுத்தோ, ஷேர் செய்தோ காரை ஓட்டலாம். ஆனால், கார் ஓட்டுவதுதான் வேலை என்பவர்களுக்கு... களைப்பு தெரிந்தாலும் வெளிக்காட்டாமல் ஸ்டீயரிங் பிடித்தாக வேண்டும். அவர்களுக்கான ஒரு ஆப்ஷன்தான் - இந்த அட்டென்ஷன் அசிஸ்ட். இது செயல்படும் விதம், செம ஸ்மார்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்