தோற்றம் மட்டுமே மாற்றம்! | Royal Enfield Thunderbird 500X - First ride - Motor Vikatan | மோட்டார் விகடன்

தோற்றம் மட்டுமே மாற்றம்!

ஃபர்ஸ்ட் ரைடு / 2018 ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500Xராகுல் சிவகுரு

ராயல் என்ஃபீல்டு பைக் வாங்குபவர்களிடத்தில் ஒரு ஒற்றுமையைப் பார்க்கமுடியும். ஸ்போக் வீல் மற்றும் டியூப் டயருக்குப் பதிலாக அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள், ஃப்ளாட் ஹேண்டில்பாருக்குப் பதிலாக சாப்பர் பைக்கில் இருப்பதுபோன்ற ஹேண்டில்பார், சிங்கிள் டோன் ஃப்னிஷுக்குப் பதிலாக டூயல் டோன் ஃப்னிஷ், அதிக சத்தத்தை எழுப்பும் எக்ஸாஸ்ட் மற்றும் ஹாரன், வழக்கமான ஹெட்லைட்டுக்குப் பதிலாக LED ப்ரொஜெக்டர் எனத் தங்களுக்குப் பிடித்தவகையில் பைக்கில் எதையாவது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதனை நீண்ட நாட்களாக கவனித்துவந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இதை நாமே ஏன் பைக்கில் ஸ்டாண்டர்டாக வழங்கக்கூடாது? எனச் சிந்தித்துச் செயல்பட்டதன் எதிரொலிதான், இங்கே நீங்கள் படங்களில் பார்ப்பது! ஆம், தனது பிரீமியம் தயாரிப்பான தண்டர்பேர்டு பைக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து, 350X மற்றும் 500X என்ற பெயரில் இந்நிறுவனம் களமிறக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick