அப்பாச்சி லவ்வர்ஸ் கவனிக்க!

ஃபர்ஸ்ட் டிரைவ் / 2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4Vராகுல் சிவகுரு., படங்கள்: க.பாலாஜி

ப்பாச்சி சீரிஸின் ஆரம்பப் புள்ளி RTR 160. விற்பனைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டna.  முற்றிலும் புதிய அப்பாச்சி RTR160 4V பைக்கின் இரண்டு மாடல்களையும், ஓசூர் டிவிஎஸ் தொழிற்சாலையின் டெஸ்ட் டிராக்கில் ஓட்டிப் பார்த்தேன்.

டிசைன்...

அப்பாச்சி சீரிஸின் தளபதியாக இருக்கும் RTR 200 4V பைக்கின் இன்ஸ்பிரேஷன் தெரிகிறது. இரண்டு பைக்குக்கும் இடையேயான வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது சுலபம். வழக்கமான 6 ஸ்போக் அலாய் வீல்கள், பைக்கின் நடுவே இருக்கும் சில்வர் நிற பாடி பேனல், சிங்கிள் பீஸ் சீட், ஒன் பீஸ் ஹேண்டில்பார், Faux ஏர் வென்ட் இல்லாத பின்பக்க பாடி பேனல், டெயில் லைட்டுக்குக் கீழே இருக்கும் சீட்டின் லாக், 3 Gloss கலர் ஆப்ஷன்கள் (சிவப்பு, கறுப்பு, நீலம்) ஆகியவை இதற்கான உதாரணங்கள். RTR 200 4V பைக்குக்கு என பிரத்யேகமாக சிறிய வைஸர், மேட் கலர்கள், டூயல் டோன் ஃபினிஷ், ஸ்ப்ளிட் சீட், 2 பீஸ் ஹேண்டில்பார், ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய அம்சங்களை வைத்துவிட்டது டிவிஎஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick