மோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்!

ரேஸ் / இ-பைக்ரஞ்சித் ரூஸோ

லகம் மின்சார மயம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆட்டோமொபைல் துறை மட்டும் விதிவிலக்கா என்ன? உலகத்தில் அனைவருக்கும் தெரிந்த ரேஸான ஃபார்முலா ஒன் ரேஸ்கூட, ஃபார்முலா-E எனும் ரேஸ் நடத்துகிறது. அப்படியென்றால், மோட்டோ ஜிபியில்..? இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது. மோட்டோ ஜிபியின் எலக்ட்ரிக் ரேஸை சத்தமே இல்லாமல் அறிமுகப்படுத்திவிட்டனர்.

சமீபத்தில் ரோம் நகரில் Moto-E எனும் புது ரேஸ் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது FIM. ஃபார்முலா ஒன் ரேஸ் போல, தனியாக ஒரு சாம்பியன்ஷிப் போட்டியாக நடத்தாமல் மோட்டோ-2, மோட்டோ-3 போட்டியுடன் புதிய பிரிவாக மோட்டோ-E நடைபெறவிருக்கிறது.

மோட்டோ-E அறிமுகம் ஒரு சிறிய அரங்கத்தில் பச்சை விளக்குகள் மட்டுமே ஒளிர, எளிமையாக நடந்தது. “சத்தம் இல்லாத எதிர்காலம் உங்களை இன்று வரவேற்கிறது” என்று இத்தாலிய மொழியில் நிகழ்ச்சியைத் துவங்கினார், பிரபல மோட்டோ ஜிபி கமென்டேட்டர் கீடோ மேடா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick