காற்றை மிரட்டிய காரின் உறுமல்!

ஸ்பெஷல் டிரைவ் / ஜாகுவார்வேல்ஸ், படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி எல்லாம் ஒரு லெவல் என்றால், ஜாகுவார் தனி லெவல். அதற்கென உலகெங்கும் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘எங்கள் ஜாகுவார் F-Pace எஸ்யூவியில்,  19 இன்ச் அலாய் வீல் இருக்கிறது. 10 இன்ச் டச் ஸ்கிரீன் இருக்கிறது' என்பதை வேண்டுமானால் ஷோரூமில் உள்ள காரில் உட்கார வைத்து வாடிக்கையாளர்களுக்கு சபலத்தை ஏற்ற முடியும். ஆனால், நெடுஞ்சாலையில் 100 கி.மீ வேகத்தில் செல்லும்போது, ஏதாவது திடீர் என்று குறுக்கே வந்தால், மின்னல் வேகத்தில் காரை திருப்பி, எங்கும் மோதிவிடாமல் பிரேக் அடித்து காரை நிறுத்தினால், இந்த கார் எப்படிச்  செயல்படும் என்பதைச் சொல்ல வேண்டுமானால், அதற்கு டிராக்குக்குத்தான் செல்ல வேண்டும்.
 
வெறும் F-Pace  மட்டும் இல்லாமல், ஜாகுவாரின் ஆரம்ப மாடலான XE, பர்ஃபாமென்ஸ் மாடலான XF, ஸ்போர்ட்டினெஸ் உடன் லக்ஸூரியையும் குழைத்து உருவாக்கப்பட்ட XJ, ஜாகுவாரின் DNA க்களுடன் உருவாக்கப்பட்ட எஸ்யூவியான F-PACE, பின் கடைசி கடைசியாக  ஜாகுவாரின் சூப்பர் ஸ்டாரான ரேஸிங் சாம்பியன் F-TYPE,  கூடவே அதன் கன்வெர்டபிள் டைப் ஆகிய அனைத்து மாடல்களின் வீர தீர பராக்கிரமங்களையும் காட்ட சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் குயின்ஸ் லேண்ட் தாண்டி இருக்கும் மண்ணூரில் அமைந்துள்ள வாப்கோ டெஸ்ட் டிராக்கில், ஜாகுவார் கம்பெனியினர் தனி டென்ட் போட்டிருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick