கன்ட்ரிமேன் எனும் ஜென்டில்மேன்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / மினி கன்ட்ரிமேன் கூப்பர் Sதொகுப்பு: தமிழ்

னவான்களின் குட்டிச் செல்லம், மினிகூப்பர் கன்ட்ரிமேன். அதிலும் ‘S’ எனும் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட், கொஞ்சம் துறு துறு பார்ட்டிகளுக்கானது. கன்ட்ரிமேன், இப்போது கொஞ்சம் எடை போட்டு, ஜென்டில்மேன் அவதாரம் எடுத்திருக்கிறது. பழசையும் புதுசையும் நிறுத்திப் பார்த்தால், இது தெரிந்துவிடும். காம்பேக்ட் என்று இதைச் சொல்ல முடியாது; காரணம், 4.3 மீட்டர் நீளத்துடன் 1,500 கிலோ எடை கொண்டிருக்கிறது புதிய கன்ட்ரிமேன்.

முதல் பார்வையிலே எல்லோரையும் மயக்கிவிடுவதுதான் மினியின் ஸ்டைல். ‘சின்ன கார்தானே; சும்மா சிட்டிக்குள் ஓட்டத்தான் சரியா இருக்கும்’ என்று நினைத்தால், பழைய கன்ட்ரிமேனைவிட பொங்கி எழுகிறது இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். BMW X1-ல் இருக்கும் அதே இன்ஜின். ட்வின் டர்போ என்பதால், 1,800 rpm-க்குப் பிறகுதான் இதன் உண்மையான சுயரூபம் வெளிபடுகிறது. மிட்ரேஞ்சிலும் பட்டையைக் கிளப்புகிறது கன்ட்ரிமேன் S.  இதனால், நேரான சாலையில் கன்ட்ரிமேன், செம சூப்பர்மேன். 0-100 கி.மீ-யை வெறும் 7.5 விநாடிகளில் தொடுகிறது. இதுவே கார்னரிங்கில், த்ரில்லிங்கைக் கூட்டுகிறது. இதன் ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தில் ஏதோ பின்னடைவு. அதிவேக கார்னரிங்கில், எடை சீராக செட்டில் ஆகும்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick