டீசன்ட்டா...ஸ்போர்ட்டியா? - எந்த டீசல் வேணும்?

போட்டி / மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் VS ஹூண்டாய் கிராண்ட்i10 டீசல் தொகுப்பு: தமிழ்

ளையராஜாவை விட்டுவிட்டு இசையைக் குறிப்பிட முடியுமா? பாட்டைப் பற்றிச் சொல்லும்போது எஸ்பிபியை எப்படித் தவிர்க்க முடியும்? நடிப்பைப் பற்றிப் பேசும்போது கமல் இல்லாமல் எப்படி? அதுபோல்தான் ஹேட்ச்பேக் கார்களில் ஸ்விஃப்ட்டை ஒதுக்கவே முடியாது. இப்படிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. 2005-ல் முதன்முதலில் அறிமுகமானது ஸ்விஃப்ட். இன்றைய தேதி வரை கிட்டத்தட்ட 17 லட்சம் கார்கள் இந்தியாவில் ஓடுகின்றன. ஒரு சிக்னலில் பத்து கார்கள் நின்றால், நிச்சயம் அதில் நான்கு ஸ்விஃப்ட்டாக இருக்கும்.

அப்படிப்பட்ட ஸ்விஃப்ட்டுக்குப் போட்டியாக என்னதான் பல கார்கள் முட்டி மோதினாலும், இதில் ஹூண்டாயின் முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும். கிராண்ட் i10 மாடலில் ஏகப்பட்ட வசதிகளோடு, டீசல் இன்ஜினிலும் மிடில் கிளாஸ் மக்களுக்குக் கையைக் கடிக்காத வகையில் கொண்டுவந்தது. கிராண்ட் i10-ம் ஸ்விஃப்ட்டுக்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் போட்டி இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick