பர்ஃபாமென்ஸ் எங்கே?

ஃபர்ஸ்ட் டிரைவ் / ஃபோக்ஸவாகன் போலோ 1.0 பெட்ரோல்தொகுப்பு: தமிழ்

சூப்பர் மார்க்கெட்டில்கூட திடீரென  ஒருநாள் பொருட்கள் இடம் மாறியிருக்கும்; பில்லிங் செக்ஷனை மாற்றியிருப்பார்கள். காரணம், மாற்றம் இருந்தால்தான் கவனிக்கப்படுவோம். இந்த உலகமும் நம்மை மறக்காமல் இருக்கும். இது கார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். போலோ அப்படித்தான் மாறி வந்திருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போலோ பெட்ரோலில் நடந்துள்ள மிகப் பெரிய மாற்றம் இது. இதன் 1.2 லிட்டர் இன்ஜின் இப்போது 1.0 லிட்டர் 3 சிலிண்டருக்கு மாறியிருக்கிறது. இந்த மாற்றம் சரிதானா?

எடையில் இருந்து இதன் மாற்றம் தொடங்கியிருக்கிறது. பழைய காரைவிட 14 கிலோ எடை குறைந்திருக்கிறது. அதே 3 சிலிண்டர்தான்; அதே 76 bhp பவர்தான். சிசி மட்டும் 200 சிசி குறைந்திருக்கிறது. டார்க்கும் கும்மெனக் குறைந்திருக்கிறது. பழைய 11.0 kgm டார்க், இப்போது வெறும் 9.5 kgmதான். ஒருவித தயக்கத்தோடுதான் டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். இதன் ஸ்மூத்னெஸ்ஸும், சட் சட் என சிக்னலில் சீறிக் கிளம்பும் இதன் ஃபன் டு டிரைவும்தான் போலோன் ட்ரேட் மார்க்.

பயந்தது நடந்துவிட்டது. ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்ததும் கார் மூவ் ஆக கொஞ்சம் நேரம் பிடித்தது. அப்போ ஓவர்டேக்கிங்குகளில்? ஆம்! பிளான் பண்ணாமல் பண்ணக் கூடாது. பழைய போலோவில் மிட் ரேஞ்சில் இருக்கும் ஒரு பன்ச் இதில் மிஸ் ஆனது. மற்ற ரெவ் ரேஞ்ச்களிலும் சொல்லிக்கொள்ளும்படி பர்ஃபாமென்ஸ் எங்கேயும் ‘வாவ்’ என்று வியக்கவைக்கவில்லை. அப்படியென்றால், 6,500 rpm வரை இழுக்க முடியவில்லையா என்றால், இல்லை; ரெட்லைன் வரை ஸ்பின் ஆகிறது. கொஞ்சம் லேட் ஆகிறது. அவ்வளவுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick