ஆக்ஸிடென்டே ஆகாத பென்ஸ்!

ஃபேஸ்லிஃப்ட் / மெர்சிடீஸ் பென்ஸ் S-க்ளாஸ்தொகுப்பு: தமிழ்

மேபேக் காருக்குப் பிறகு பென்ஸின் காஸ்ட்லி கார் S-க்ளாஸ். பென்ஸுக்கும் இது ஃபேஸ்லிஃப்ட் பீரியட் போல! S-க்ளாஸி லும் ஃபேஸ்லிஃப்ட் வந்துவிட்டது. எல்லாவற்றிலுமே புதுமையையும் பணக்காரத்தனத்தையும் ரசனையையும் கலந்து கட்டி அடித்திருக்கிறது பென்ஸ்.

காரைச் சுற்றிலும் ஏகப்பட்ட க்ரோம் ஃபினிஷ். இதன் ஹெட்லைட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். ஹெட்லைட்டுக்கு மேலே தனது ஃபேவரைட்டான மூன்று LED ஸ்ட்ரிப்புகள்... இவற்றை ‘ட்ரிபிள் டார்ச் டிசைன்’ என்கிறது பென்ஸ். இரண்டு ஸ்ட்ரிப்கள் இருந்தால் ‘E-க்ளாஸ்’... ஒன்று மட்டும் இருந்தால் ‘C-க்ளாஸ்’. இந்த ஹெட்லைட், கிட்டத்தட்ட அரை கி.மீ-யைத் தாண்டி... அதாவது, 650 மீட்டர் வரை வெளிச்சத்தைப் பீய்ச்சியடிக்கும்.

உள்ளே, ஆரஞ்ச் மூன் லைட்டில் ஏதோ பார்ட்டி நடக்கும் ரெஸ்டாரன்ட் மூடு கிடைக்கிறது. டயல்களுக்கான ஆம்பியன்ட் லைட்டிங்கில் 64 கலர் ஆப்ஷன்கள் உண்டு. சில காஸ்ட்லி கார்களில் கசகசவென கன்ட்ரோல்கள் குழப்பியடிக்கும். S-க்ளாஸில் சிம்பிள் அண்டு நீட். ஆனாலும், மனம் மயக்குகிறது. 12.3 இன்ச் டச் ஸ்கிரீன். முன்னாலும் பின்னாலும் போனுக்கு வயர்லெஸ் சார்ஜ் ஆப்ஷன் இருக்கிறது. இதற்கு உங்கள் போனும் டாப் மாடலில் இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick