ஆஃப் ரோடிங் சந்திரமுகி!

ஆஃப் ரோடு அறிமுகம் / ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக்தொகுப்பு: தமிழ்

‘எல்லோருக்குள்ளும் ஒரு அட்வென்ச்சன்  இருப்பான்’ என்பதை நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டது ஜீப் நிறுவனம். அமெரிக்க நிறுவனமான ஜீப் லோகோவை, இந்தியாவில் பார்ப்பதையே பரவசமாகக் கருதினர், கார் விரும்பிகள். ‘காம்பஸ்’ எனும் எஸ்யூவி மூலம் தனது பயணத்தைத் தொடங்கினாலும், ‘‘எஸ்யூவிதான்... ஆனா பெருசா ஆஃப் ரோடு பண்ண முடியலையே!’’ என்கிற வாடிக்கையாளர்களின் குறையைத் தீர்க்கப் புறப்பட்டுவிட்டது ஜீப். காம்பஸை அடிப்படையாகக் கொண்டு, ட்ரெய்ல்ஹாக் எனும் ஆஃப் ரோடிங் எஸ்யூவி இந்தியாவுக்கு வரவிருக்கிறது.

ஆஃப் ரோடிங் என்றால், என்னவெல்லாம் இருக்க வேண்டும்? எல்லாவற்றையும் பூர்த்தி செய்கிறதா காம்பஸ் ட்ரெய்ல்ஹாக்?

லாங்ஷாட்டில் அதே காம்பஸ்தான். சாதாரணமாக மாற்றம் என்ன என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால், ஆஃப் ரோடிங்கில் ஊறியவர்கள் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள் - ‘அட, நிறைய மாறியிருக்கே’ என்று. கண்ணங்கரேரென்ற கறுப்பு ரூஃப், அதே கறுப்புப் பட்டை கொஞ்சூண்டு பானெட்டில் தொடரும் ஸ்டைல், வாகனங்களை டோ செய்வதற்கு சிவப்பு நிற ஹூக், டெயில் கேட்டில் பெரிய லேடர், ரோப் கட்டி காரை மீட்க வின்ச், தாட்டியான கிளாடிங்குகள் - இவையே போதும் ‘ஆத்தா, நான் பாஸாயிட்டேன்’ என்கிற ரீதியில் ஆஃப் ரோடிங் அம்சங்களில் சிரிக்கிறது ட்ரெய்ல்ஹாக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick