இன்னும் பன்ச் வேண்டும்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / டாடா டிகோர் AMT தொகுப்பு: தமிழ்

‘ஆதார் கார்டு அவசியம்’ என்று அரசு முடிவுக்கு வந்ததுபோல, ஒவ்வொரு கார் நிறுவனங்களும் ஆட்டோமேட்டிக் கார் அவசியம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டன. டிசையர், டியாகோ, ரெடி-கோ, கிராண்ட் i10, இக்னிஸ் என்று கலந்துகட்டி AMT கார்கள் வந்து குவிந்துவிட்டன. அந்த வரிசையில் டாடா, இப்போது டிகோர் AMT-யை இறக்கியிருக்கிறது. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் டியாகோ AMT மாதிரி, டிகோரிலும் அதே இன்ஜின் ஆப்ஷன்தான். 1.2 லிட்டர் பெட்ரோல், 85 bhp பவர்.

டிகோரின் இன்டீரியர், அவுட்லுக் பற்றி ஏற்கெனவே நன்கு பரிச்சயம்தான். ‘ஸ்டைல்பேக்’ என்று இதற்கு ஒரு அடைமொழி உண்டு. கூபே போன்ற அதே டிசைன், புரொஜெக்டர் ஹெட்லைட், ஸ்ப்ளிட் டெய்ல் லைட், அதே 420 லிட்டர் பூட் ஸ்பேஸ், 15 இன்ச் வீல்கள் என்று அதே Styleback லுக்தான். AMT மட்டும்தான் நாம் இங்கே கவனிக்க வேண்டியது.

இதிலிருப்பது 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ். ‘D’ பக்கம் லீவரைத் தள்ளி பிரேக்கிலிருந்து காலை எடுத்தால், ஆக்ஸிலரேட்டர் மிதிக்காமல் லேசாக மூவ் ஆகிறது. அதாவது, க்ரீப் ஃபங்ஷன் இருக்கிறது. சிட்டி to சிட்டி டிராஃபிக்குக்கும், பார்க்கிங் ஏரியாக்களில் ரிவர்ஸ் எடுக்கும்போதும், மலை ஏற்றப் பயணங்களின்போதும் இது சூப்பராக இருக்கும். ஆனால், எக்ஸ்ட்ராவாக ஒரு மிதி மிதித்தால், ‘வெடுக்’ என ஆக்ஸிலரேட் ஆவது பயத்தைக் கிளப்பிவிட்டது. அப்படியென்றால், இன்ஜின் பவர் டெலிவரி சீராக இல்லை என்று அர்த்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick