ஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது!

ஃபேஸ்லிஃப்ட் / ஹூண்டாய் i20தமிழ்

ரு வாசகர் ஹூண்டாய் i20 கார் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘‘i20 காரில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தேன். எந்தக் களைப்பும் தெரியவில்லை. வேறு கார்களிலும் நான் பயணித்திருக்கிறேன். அவற்றில் இந்தளவு சொகுசு உணர்ந்ததில்லை. நல்ல ஃபீலிங்!’’

நிஜம்தான். ஸ்விஃப்ட்டை ஒப்பிடும்போது i20-ன் விற்பனை குறைவுதான். ஆனால், சொகுசும் வசதிகளும் i20-ல் வேற லெவலில் இருக்கிறது. ரிச் லுக் இன்டீரியர், தரமான கேபின், டச் ஸ்கிரீனில் இருந்து ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோல்ஸ் வரை எதிலும் குறை வைக்கவில்லை ஹூண்டாய். அப்படிப்பட்ட i20 - இப்போது ஃபேஸ்லிஃப்ட் கொடுத்திருக்கிறது ஹூண்டாய்.

அவுட்லுக்...

வெளித்தோற்றத்தைப் பொறுத்தவரை, ‘ஃபேஸ்லிஃப்ட்னு சொன்னாங்களே... ஏதாவது மாறியிருக்கா?’ என்று தேட வேண்டியிருக்கிறது. அறுங்கோண கிரில் டிசைன் லேசான வளைவுகளோடு இருக்கிறது. அவ்வளவுதான். ஆனால், இதைச் சட்டெனக் கண்டுபிடிப்பது கஷ்டம். பம்ப்பருக்கும் இதே கதைதான். முக்கோண பனி விளக்குகள் சூப்பர். அந்த ஏர் வென்ட், ஏரோடைனமிக்குக்குப் பெரிதுவும் உதவும் என்கிறது ஹூண்டாய். புரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ், LED DRL ஓகே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick