டாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா?

தொடர் / கார் வாங்குவது எப்படி? - 4 தமிழ், படங்கள்: விநாயக்ராம்

ரொம்ப நாட்களாக மோ.வி அலுவலகத்துக்கு சில போன்கள், மெயில்கள். ‘எப்பவுமே ஓன் போர்டு கார் ஓனர்களைப் பத்தி மட்டுமே கவலைப்படுறீங்க... நாங்களும் கார் ஓனருங்கதான். கார் வாங்குறதுல எங்களுக்கும் குழப்பம் இருக்கத்தான் செய்யும்!’ - இப்படிச் சொல்பவர்கள் டாக்ஸி டிரைவர்கள் கம் ஓனர்கள்.

ஓன் போர்டைப் பொறுத்தவரை நண்பர்கள், குடும்ப உறவினர்கள் என்று விசாரித்து காரைத் தேர்வு செய்யலாம். பட்ஜெட்டுக்கு ஏற்றபடி ஆப்ஷன்களும் அதிகம். இதுவே T-போர்டு எனும்போது, கடனில்தான் கார் வாங்கியாக வேண்டும் என்ற சூழல் அதிகம்.

எவ்வளவு பட்ஜெட், எந்த கார்?

டாக்ஸி கார் வாங்குபவர்களைப் பொறுத்தவரை, பட்ஜெட்தான் ரொம்ப முக்கியமான விஷயம். நீங்களே டிரைவராகப் போகிறீர்களா? டிரைவர் வைத்து ஓட்டப் போகிறீர்களா? டாக்ஸி கம்பெனிகளில் அட்டாச்மென்ட் விடப் போகிறீர்களா? இவையெல்லாவற்றையும் டிக் அடித்துவிட்டு, பட்ஜெட்டையும் முடிவு செய்யுங்கள்.

உதாரணத்துக்கு, 5 முதல் 6 லட்ச ரூபாய்தான் பட்ஜெட் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஹேட்ச்பேக்தான் வாங்க முடியும். எல்லா நிறுவனங்களும் தங்கள் கார்களை டாக்ஸி கார் செக்
மென்ட்டில் ரிலீஸ் செய்யாது. குறிப்பிட்ட சில கார்கள்தான் அந்த மார்க்கெட்டுக்காகத் தயாரிக்கப்படும். மாருதியில் இந்த பட்ஜெட்டுக்கு  ரிட்ஸ் மட்டும்தான் ஆப்ஷன். கடந்த ஜனவரி மாதம் ரிட்ஸும் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.  டாடாவில் இண்டிகா மட்டும்தான் இருக்கிறது. செவர்லே பீட், டாக்ஸி மார்க்கெட்டில் சக்கைப் போடு போட்டது. காரணம், இந்த டீசல் இன்ஜினின் மைலேஜும், இதன் ஸ்டைலும். ஃபிகோவும் அப்படித்தான். ரிட்ஸ், பழைய ஃபிகோ, பீட் ஆகியவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதால், இண்டிகாவைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். கொஞ்சம் பட்ஜெட்டை அதிகரித்தால், கிராண்ட் i10 ப்ரைம் காரைப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick