சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவிச்சந்திரன்

இந்த இதழிலிருந்து...  ‘டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்’ ரவிச்சந்திரன்

லாஜிஸ்டிக்ஸ் என்பது நிஜமாகவே ஒயிட் காலர் வேலைதான். ஆனால், அது என்ன போக்குவரத்து என்பதைப் பொறுத்துதான் இது ஒயிட் காலரா, அழுக்கு காலரா என்பதை முடிவு செய்ய வேண்டும். இப்போதைக்கு ‘லாஜிஸ்டிக் என்றால் என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். ‘‘லாரியில பொருட்கள் ஏத்திட்டு லோடு அடிச்சு இறக்குறது... அதானே’’ என்று விளக்கம் சொல்லிச் சிரிப்பார்கள். வேர் ஹவுஸ், டிஸ்ட்ரிப்யூஷன் 3PL, ஷிப்பிங் மேனேஜ்மென்ட், ட்ரான்ஸ்போர்ட்டேஷன் 3PL, ஃபார்வேர்டிங், ரயில் மேனேஜ்மென்ட், ஏர் 3PL என்று வெவ்வேறு வகையான லாஜிஸ்டிக்ஸ் உண்டு. ஜிஎஸ்டி மாதிரி இதன் புரிதலில் கொஞ்சம் சிக்கல் இருக்கும். அதை விடுங்கள்.

லாஜிஸ்டிக்ஸ் என்பது மிடில் க்ளாஸ் லாஜிக்படி பார்த்தால், லாரியில் லோடு அடிப்பதுதான். காலையில் நாமக்கல்லில் பிராய்லர் கோழிகள் போட்ட முட்டைகள், சாயங்காலம் நம் அண்ணாச்சி கடைகளில் உடையாமல் கிடைப்பதற்குக் காரணம், இந்த லாரி லாஜிஸ்டிக்ஸ்தான். இதில் பொருள் உற்பத்திச் செலவு, இறக்குக் கூலி, வாகனப் பராமரிப்பு, டீசல் தொகை, டோல்கேட் கட்டணம்  ஆகிய எல்லாவற்றையும் தாண்டி, அந்த லாரி ஓனருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பொறுத்துதான் லாஜிஸ்டிக்ஸின் துடிப்பு இருக்கிறது.

இப்போதைக்கு எல்லோரது சந்தேகமும் இதுதான். ‘‘என்கிட்ட இரண்டு ட்ரக் இருக்கு. என்னால் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இறங்கி லாபம் சம்பாதிக்க முடியுமா?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick