அலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்!

ஏன் எதற்கு எப்படி? / அலாய் வீல்தமிழ்

ன்னத்தில் இடும் சின்னப் பொட்டு, குழந்தைகளின் முகத்துக்கு அத்தனை அழகு சேர்க்கும். கார்களுக்கு அலாய் வீலும் அப்படித்தான். சாதாரண ஆம்னியைக்கூட ஆடி போல் அம்சமாகக் காட்டும் சக்தி, அலாய் வீல்களுக்கு உண்டு. ஆனால், இது கார்களுக்கு ரொம்பவும் அவசியமான ஒன்றா..?

‘அலாய் வேணும்னு சொல்லலை; இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்’ என்று கமல் பாணியில்தான் பதில் சொல்ல வேண்டும். ‘கார் செமையா இருக்கே... என்ன கார் இது?’ என்று நம்மை ஒரு கணம் நிறுத்திப் பார்க்க வைப்பது அலாய் வீல்களின் அழகு. அதேநேரம்,  அழகைத்தாண்டி அலாய் வீல்களால் பல நன்மைகளும் உண்டு. கார் விற்பனையின்போது எக்கச்சக்க வேரியன்ட்கள் இருக்கும். உதாரணத்துக்கு, மாருதி டீசல் கார்களில் LDI, VDI, ZDI என்று வேரியன்ட்கள் இருக்கும். இதில் அனைத்து வசதிகளும் நிறைந்த வேரியன்ட் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும். ஸ்டீரியோ, ஃபாக் லேம்ப் போன்ற சில வசதிகளைத் தாண்டி அலாய் வீல்களும் இருக்கும் என்பது முக்கியக் காரணம். ஆம்! அலாய் வீல்கள் காஸ்ட்லிதான். காரணம், அலுமினியம் - மெக்னீஸியம் என்று லைட் வெயிட்டான, உறுதியான உலோகங்களால் தயாரிக்கப்படுவது இதற்குக் காரணம். பழைய மாடல்களில் வெறும் வீல் ஹப்கள் மட்டும்தான் இருந்தன. இப்போது சாதாரண வேரியன்ட்களில்கூட வீல் கேப்கள் பொருத்த ஆரம்பித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட அலாய் போன்ற ஸ்டைல், உறுதி, நீண்ட ஆயுள் கொண்ட வீல் கேப்கள் இப்போது சாதாரணமாகிவிட்டன. அதையும் தாண்டி அலாய் என்பது ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிவிட்டது. ஹூண்டாய், டாடா போன்ற கார்களில் டைமண்ட் கட் அலாய் வீல் என்பது இப்போது மிகவும் பிரபலம். வைரத்தை வெட்டியதுபோல் மினுமினுப்பது இதன் ஸ்பெஷல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick