மோட்டார் கிளினிக்

எனது பட்ஜெட் 15 லட்சம் ரூபாய். புதிதாக மிட்சைஸ் செடான் கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறேன். மாருதி சுஸூகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆகியவற்றில் எது பெஸ்ட்? எனக்கு சிறப்பான ஓட்டுதல் அனுபவம் முக்கியம். 

- ஆண்ட்ரூஸ் லியோ, இமெயில்.

மாருதி சுஸூகி, இந்த ஆண்டில் சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது. எனவே, நீங்கள் குறிப்பிட்ட மாடல்களில் விலை குறைவான மாடலாக இருந்தாலும், புதிய மாடலுக்குக் காத்திருப்பது நலம். ஆனால், உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, ஹூண்டாய் வெர்னா சரியான சாய்ஸாக இருக்கும். ICOTY 2018 மற்றும் மோ.வி விருதினைப் பெற்றிருக்கும் வெர்னா, மினி எலான்ட்ரா போன்ற டிசைன் - அதிகப்படியான சிறப்பம்சங்கள் - ஸ்மூத்தாக இயங்கும் இன்ஜின்கள் - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் - கச்சிதமான விலை - நல்ல கட்டுமானத் தரம் என ஒரு ஆல்ரவுண்டர் பேக்கேஜாக அசத்துகிறது. நல்ல ரீ-சேல் மதிப்பு, சொகுசான கேபின், ஸ்டைலான டிசைன், அதிக வசதிகள், போதுமான பர்ஃபாமென்ஸைத் தரும் இன்ஜின்கள் போன்ற பலங்களை சிட்டி கொண்டிருந்தாலும், இது விலை மற்றும் டீசல் இன்ஜின் விஷயத்தில் வெர்னாவிடம் வீழ்ந்துவிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick