“எமனைப் பார்த்துட்டு வந்திருக்கேன்!”

பேட்டி / ரேஸ்தமிழ், படங்கள்: செ.விவேகானந்தன்

2013, ஆகஸ்ட் I இடம்: பெரம்பூர், சென்னை.

‘‘டேய், ரேஸ் உயிருக்கு ஆபத்தான விளையாட்டு. உன்னை நம்பித்தான் நாங்க இருக்கோம். ரேஸிங்ல கலந்துக்கிட்டு உனக்கு எதாச்சும் ஆச்சுனா நாங்க என்ன பண்றது’’ என்று செபாஸ்டியனின் பெற்றோர், காட்டமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

2017, ஜூலை I இடம்: ராமச்சந்திரா மருத்துவமனை, சென்னை.

‘‘மன்னிச்சிடுங்க. இன்னும் ஒரு மணிநேரத்துல எல்லாம் முடிஞ்சிடும். சொந்தக்காரங்களுக்குச் சொல்லி விட்டுடுங்க!’’ என்று செபாஸ்டியனின் பெற்றோரிடம், மருத்துவர்கள் சினிமாவில் வருவதுபோல் கண்ணாடியைக் கழற்றியபடி சொல்கிறார்கள்.

2018, மார்ச் I இடம்: திருமுல்லைவாயல் ரேஸ் ட்ராக்

‘‘இன்னும் எத்தனை தடவை இப்படி நடந்தாலும், ரேஸ்தான் எனக்கு எல்லாமே! அடுத்த சாம்பியன்ஷிப்தான் என் டார்கெட்’’ என்று R15 பைக்கின் ஆக்ஸிலரேட்டர் முறுக்கி, பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் செபாஸ்டியன்.

நீங்கள் ஒரு பைக் ரேஸிங் ஃப்ரீக்காக இருந்தால், பின்வரும் செய்தி உங்கள் மெடுல்லா ஆப்லேங்கேட்டாவை சோகமாக மென்று தின்னும். 2011, அக்டோபர் மாதம் நடந்த மோட்டோ ஜீபி பைக் ரேஸில் மார்க்கோ சைமன் செல்லியின் பைக் க்ராஷ் சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தனக்குப் பிடித்த ரோல்மாடலான, நண்பனான ‘ரேஸிங் சாம்பியன்’ வாலன்டினோ ராஸியாலேயே பைக் ஏற்றப்பட்டு, ட்ராக்கிலேயே உயிர் நீத்த சைமன் செல்லியின் சம்பவம், கிட்டத்தட்ட அப்படியே நம் ஊர் செபாஸ்டியனுக்கும் பொருந்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick