தெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்! | Readers tour from Madurai to Thengumarahada - Motor Vikatan | மோட்டார் விகடன்

தெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / மதுரை - தெங்குமரஹடாதமிழ், படங்கள்: எம்.விஜயகுமார்

சும்மா காரை எடுத்தோமா, கிளம்பினோமா என்று எல்லோரும் ஈஸியாக அப்ரோச் பண்ணிவிட முடியாத சில இடங்கள், தமிழ்நாட்டில் உண்டு. தெங்குமரஹாடா அதில் ஒன்று. இது சுற்றுலாத் தலம் கிடையாது; அனுமதியும் சுலபமாகக் கிடைத்துவிடாது; அதேபோல், எல்லா கார்களும் அசால்ட்டாகப் போய்வர முடிகிற சாலையும் கிடையாது. ஆனால் ஒரு தடவை போய்விட்டால், அந்த த்ரில்லிங் ரொம்ப நாட்களுக்கு ‘பச்சக்’ என்று அப்படியே மனசுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும். ‘‘அப்படிப்பட்ட ஓர் இடத்துக்குத்தான் போகணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டோம். நம்ம 4 வீல் டிரைவ் மான்ட்டெரோ சரியான சாய்ஸா இருக்கும்னு நினைக்கிறேன்’’ என்று மிட்சுபிஷி மான்ட்டெரோவின் ஆக்ஸிலரேட்டர் மிதித்துக் காட்டினார் மதுரையைச் சேர்ந்த பிரதீப். ‘‘ரெண்டு கார்னா இன்னும் த்ரில்லிங் அதிகமா இருக்கும்தானே.. என் ஜிப்ஸியும் கூட வரட்டும். மான்ட்டெரோவுக்கெல்லாம் அண்ணன் இந்த ஜிப்ஸி!’’ என்று உடன் வந்தார் நண்பர் அரவிந்த். இனி தெங்குமரஹாடாவுக்கு விடு ஜூட்!

 மதுரையில் இருந்து தெங்குமரஹாடாவுக்குக் கிட்டத்தட்ட 250 கி.மீ! திண்டுக்கல்-திருப்பூர் வழி, வெள்ளக்கோவில்-ஊத்துக்குளி வழி, கரூர் வழி என்று ஜிபிஎஸ்-ஸும் தெரிந்தவர்களும் பல வழிகள் சொன்னார்கள். கடைசியில் குன்னத்தூர் சாலையில் இடதுபுறம் திரும்பி, புளியம்பட்டி வழியாக பவானிசாகர் வந்துதான் ஆக வேண்டும். பவானிசாகரில் இருந்து நேராகப் போனால், கராச்சிகொரை. அதில் இடதுபுறம் திரும்பினால், சுஜ்ஜல்குட்டை. இதுதான் தெங்குமரஹாடாவுக்கான செக்போஸ்ட். 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க. கால்மணி நேரம் தாமதமானதால், தெங்குமரஹாடாவில் ஒருநாள் அனுபவம் வீணாகப் போனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick