ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் கார்/பைக்தமிழ்

குட்டி ஸ்பீடு பிரேக்கர்!

மால்கள், தியேட்டர்கள், சாலைகள் போன்றவற்றில் கார் பார்க்கிங் செய்வது ரொம்பச் சிரமமாக இருக்கும். இடநெருக்கடி ஒரு பிரச்னை என்றால், ஏற்ற-இறக்கங்கள் அடுத்த பிரச்னை. சில பார்க்கிங்குகள் இறக்கமாகவோ, ஏற்றமாகவோ இருக்கும் பட்சத்தில், என்னதான் ஹேண்ட்பிரேக் போட்டாலும் கார் நிற்காது. ஆட்டோமேட்டிக் கார் என்றால் பிரச்னை இல்லை. மேனுவல் கார்களில் முதல் கியரைப் போட்டுவிட்டு பார்க்கிங் பண்ணுவது சாலச்சிறந்தது. ஆனால், இதுவே நீண்ட நேர பார்க்கிங் என்று வரும்போது, இது பரிந்துரைக்கப்பட வேண்டிய விஷயமில்லை. சிலர் நாட்கணக்கில் காரை முதல் கியர் போட்டு பார்க் செய்வார்கள். அது போதாதென்று கல்லை எடுத்து வீலுக்குப் பின்னால் முட்டுக் கொடுத்தும் பார்க் செய்வார்கள். இது கியர்பாக்ஸ், டயர் போன்றவற்றுக்கு நல்லதல்ல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick