கேட்ஜெட்ஸ் | Gadgets - Motor Vikatan | மோட்டார் விகடன்

கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம் / ஸ்மார்ட் டிவி - மொபைல் போன்

MI LED SMART TV 4

விலை : ரூ. 39,999

* 55” 4K HDR ஃபிரேம்லெஸ் டிஸ்ப்ளே
* 4.9 mm அல்டிரா தின் டிஸ்ப்ளே
* Dolby Audio / DTS-HD 2 * 8 W ஸ்பீக்கர்ஸ்
* 2ஜிபி ரேம்
* 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 64bit Quad-Core 1.8GHz பிராசஸர்
* USB போர்ட்:  1 x 3.0, 1 x 2.0
* HDMI போர்ட் :  3

மொபைல் உலகில் பட்ஜெட் மாடல்களை அறிமுகப்படுத்தி, பெரிய நிறுவனங்களை மிரள வைத்தது, ஷியோமி ரெட்மி நிறுவனம்.  தற்போது டி.வி விற்பனையிலும் இறங்கிவிட்டது. முன்னணி நிறுவனங்களால் ஒரு லட்சத்துக்கு விற்கப்படும் டிவி மாடல்களை, அதில் பாதி விலைக்கு விற்பனை செய்கிறது ரெட்மி

உலகின் அல்டிரா தின் திக்னெஸ் கொண்ட ஸ்மார்ட் டிவியை வெளியிட்டிருக்கிறது ரெட்மி. ஸ்கிரீன் திக்னெஸ் பல முன்னணி மொபைல்களின் திக்னெஸைவிட சிறியது.

இதன் இன்னொரு ஸ்பெஷல், தனியாக செட்டாப் பாக்ஸுக்கு ரிமோட் தேவையில்லை. அனைத்து பட்டன்களையும், தனது ஜாய்பேட் போன்ற டி.வி ரிமோட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது ரெட்மி. அதேபோல், பார்க்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப டி.வி நிகழ்ச்சிகளின் தொகுப்பை ஒவ்வொருமுறையும் மாற்றி அமைக்கிறது இந்த ஸ்மார்ட் டிவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick