ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா! | First Drive MAHINDRA ALTURAS G4 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா ஆல்ட்டுராஸ் G4

னி மஹிந்திராவின் விலை உயர்ந்த கார் XUV 500 இல்லை; ஆல்ட்டுராஸ் G4-தான். மஹிந்திராவின் கூட்டணியோடு இந்தியாவில் விற்பனையான ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் காரின் அடுத்த தலைமுறை வெர்ஷன்தான் இந்த ஆல்ட்டுராஸ் G4. வலுவான லேடர் ஃப்ரேம் சேஸி, 4 வீல் டிரைவ், 7 சீட் என ஃபோர்டு எண்டேவர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனருக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது இந்த ஆல்ட்டுராஸ். புதிய இரண்டாம் தலைமுறை ரெக்ஸ்ட்டனுக்கு மஹிந்திரா லோகோவைப் பொருத்தி ஆல்ட்டுராஸ் G4 எனப் பெயர் மாற்றியிருக்கிறார்கள். முந்தைய ரெக்ஸ்ட்டனில் மெர்சிடீஸ் M க்ளாஸ் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தியிருப்பார்கள். இதில் முற்றிலும் புதிய சேஸி, 7 ஸ்பீடு Gtronic கியர்பாக்ஸ் மட்டும் மெர்சிடீஸ் பென்ஸிடம் வாங்கியிருக்கிறார்கள்.

[X] Close

[X] Close