மோஜோ-வின் பட்ஜெட் மாடலைக் கொண்டுவரும் மஹிந்திரா!

மஹிந்திரா மோஜோ - ஸ்பை போட்டோராகுல் சிவகுரு

ந்து ஆண்டுக்கால டெஸ்ட்டிங்கின் பலனாக, கடந்த 2015-ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த பைக் - மோஜோ. USD ஃபோர்க் - பைரலி டயர்கள் - அதிர்வுகளற்ற இன்ஜின் - வித்தியாசமான டிசைன் எனப் பல ப்ளஸ் பாயின்ட்களைக் கொண்டிருந்தாலும், மிகக் குறைவான டீலர் நெட்வொர்க் - சுமாரான ஓட்டுதல் அனுபவம் - ஏபிஎஸ் இல்லை - அதிக விலை என மைனஸ்களையும் கொண்டிருந்தது. இதன் விளைவாகவே, விற்பனையில் பலத்த ஏற்ற இறக்கங்களையே இதுவரை மோஜோ பெற்றுவந்திருக்கிறது. தற்போது பிரபலமாகி வரும் ஸ்போர்ட்ஸ் டூரர் / பவர் க்ரூஸர் செக்மென்ட்டை மனதில்வைத்து, விலை குறைவான மோஜோ UT300 பைக்கைக் களமிறக்க முடிவு செய்துள்ளது மஹிந்திரா. இதற்கு யுனிவர்சல் டூரர் எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், வழக்கமான மாடலை XT300 (Xtreme Tourer) என இந்த நிறுவனம் பெயர் மாற்றம் செய்திருக்கிறது. மோஜோ UT300 பைக்கை வாங்க விரும்புபவர்கள், 5,000 ரூபாய் செலுத்தி, மஹிந்திரா டூ-வீலர் டீலர்களில் புக் செய்துகொள்ளலாம். இந்த பைக்கும், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக டெஸ்ட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்