நிஸான் லீஃப்... சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்!

ஃபர்ஸ்டு டிரைவ் - நிஸான் லீஃப்தொகுப்பு: ராகுல் சிவகுரு

லகளவில் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் காரான இரண்டாம் தலைமுறை  லீஃப் மாடலை, இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது நிஸான். இதில் 160 கி.மீ தூரம் பயணிக்க வேண்டிய டாஸ்க் நமக்கு. ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால், எலெக்ட்ரிக் கார்களில் இவ்வளவு தூரம் செல்வது என்பது கனவாகவே இருந்தது. அதை மனதில் வைத்து நாம் கொஞ்சம் யோசித்த வேளையில், சிங்கிள் சார்ஜில் 240 கி.மீ முதல் 400 கி.மீ தூரம் வரை லீஃப் செல்லும் என முகத்தில் புன்சிரிப்புடன் பதில் சொன்னது நிஸானின் பொறியாளர்கள் குழு. இந்த காரில் பொருத்தப் பட்டிருக்கும் 40kWh பேட்டரி அமைப்பை, முழுவதுமாக சார்ஜ் செய்ய 8 மணி நேரம் ஆகும். இதுவே ஃபாஸ்ட் சார்ஜர் என்றால், 80 சதவிகித பேட்டரியை வெறும் 40 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிட முடியும். அதாவது, மதிய உணவை அருந்தும் நேரத்தில், சுமார் 150 கிமீ தூரம் செல்வதற்கான சார்ஜை ஏற்றிக்கொள்ள முடியும் என்பது ப்ளஸ்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick