ஆக்சஸரீஸ்

டூர்தமிழ்

சாதாரண நேரங்கள்போல, மழை அல்லது பனிக்காலங்களில் ஈஸியாக பைக் ஓட்ட முடியாது. ஹெல்மெட் வைஸரை ஏற்றிவிட்டால், பனி முகத்தில் அறையும். இறக்கிவிட்டால், பனித்துளிகள் வைஸரில் வழிந்து பார்வையை மறைக்கும். பனிக்காலங்களில் பைக் ஓட்டுபவர்கள், குத்துமதிப்பாகத்தான் ஓட்டுவார்கள் என்பது உண்மை. இந்த நேரத்தில் கார்களின் விண்ட்ஷீல்டுக்கு இருப்பதுபோல், வைப்பர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். வைப்பர் வைத்த வைஸரும் மார்க்கெட்டில் உண்டு என்றாலும், பேட்டரி, இடநெருக்கடி என்று இதைப் பராமரிப்பது ரொம்பக் கஷ்டம். ‘பின் லாக் வைஸர்’ அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறது. இதில் பனியை உறிஞ்சி எடுக்கும் தன்மை கொண்ட மெட்டீரியல் இருக்கிறது என்பதால், பளிச்சென சுத்தமான கண்ணாடிபோல் எந்நேரமும் வைஸர் இருக்கும். இது ஸ்பான்ஜ்போல் செயல்படும் என்கிறது பின் லாக் நிறுவனம். சாதாரண வைஸரில், இந்த பின் லாக் சிலிக்கான் பெட் ஒன்றை இன்செர்ட் செய்ய வேண்டும். அவ்வளவுதான். ஒரே ஒரு வருத்தமான விஷயம் - இது இந்திய மார்க்கெட்டில் இல்லை என்பதுதான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்