புதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள் | Practical guidelines for Successful Logistics business - Joe D'Cruz - Motor Vikatan | மோட்டார் விகடன்

புதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
லாஜிஸ்டிக்ஸ்ஜோடி குருஸ்

டுத்த நொடியில் என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருப்பதுதான்  நம் வாழ்வின் சுவராஸ்யமே.‘அறியாமை பரவசமானது’ என்று சொல்வார்களே... அதுபோல. 1991-ம் ஆண்டின் இறுதி. கல்லூரியில் விரிவுரையாளராகும் கனவோடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தபடியிருந்த நான், ஆய்வுப் படிப்பை உதறிவிட்டு மும்பை செல்கிறேன். அங்கு சென்ற மூன்றாவது வாரத்திலேயே  வேலை கிடைக்கிறது. வேலையில் சேர்ந்த நாள், அந்த வாரக் கடைசியான வெள்ளிக்கிழமை. மாலையில் அலுவலக மேலாளர் என்னை காரில் அழைத்துக்கொண்டு எங்கோ போகிறார். வானம் இருண்டு நல்ல மழை. வேகமான காற்று வேறு… கனவுலகில் நடப்பதுபோல் நனவுலகில் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தவாறே ஓட்டுநரின் அருகே அமர்ந்திருக்கிறேன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick