சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப் | Reader Great Escape - A Travel With honda crv - Motor Vikatan | மோட்டார் விகடன்

சி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங்! - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஹோண்டா சிஆர்-விதமிழ் - படங்கள்: க.விக்னேஷ்வரன், விநாயக்ராம்

புத்தாண்டுச் சிறப்பிதழுக்குப் பயணமும் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் டாப் ஸ்லிப்பைத் தேர்ந்தெடுத்தோம். முயற்சி வீண் போகவில்லை. ‘சாப்பாடு சூப்பரா இருந்துச்சு’ என்று திருமண வீட்டில், சமையலைப் பற்றி பலர் பாராட்டுவதுபோல் இருந்தது டூர். தன் ஹோண்டா CR-V  காரில், நண்பர் சௌந்தர்ராஜுடன் ரெடியாக இருந்தார் குணசேகரன். ட்ரூ காலரில் ‘ஸ்போர்ட்ஸ் குணா’ என்று பெயர் வரும் அளவுக்கு, விளையாட்டு வெறியர். ‘‘ சி.ஆர்.வி-யில் டீசல் டெஸ்ட்டிங் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன். ஜிபிஎஸ் இல்லாததும், ஹேண்ட்பிரேக் காலில் இருக்கிறதும்தான்  சி.ஆர்-வி-யில் எனக்குப் பிடிக்காத விஷயம்.’’ என்றவரை ஆசுவாசப்படுத்தி, மொபைலில் ஜிபிஎஸ் செட் செய்துவிட்டு, கோவை காளப்பட்டியில் இருந்து ஜூட் விட்டோம்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick