புது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்தொகுப்பு: தமிழ்

ப்போதுதான் ஃபேஸ்லிஃப்ட் வந்தது... அதற்குள் 17,000 கார்கள் புக்கிங் ஆகிவிட்டது! க்ரெட்டாவுக்கு எப்போதுமே மவுசுதான். ஃபேஸ்லிஃப்ட்டை ஓட்ட வாய்ப்புக் கிடைத்தால் விடுவேனா?

பழசே புதுசு மாதிரிதான் இருக்கும். புது க்ரெட்டா இன்னும் ரிச் லுக்கில் அசத்துகிறது. உருவம் மாறவில்லை. சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே! புதிய கிரில், ஹெட்லாம்ப் டிசைன் மாறவில்லை; ஆனால், பை-புரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ், LED DRL இப்போது பனிவிளக்குகளைச் சுற்றி, ரீ-ஸ்டைல்டு ‘C’ வடிவ பம்பர்... இவையெல்லாம் மாற்றங்கள். எஸ்யூவி லுக் வேண்டுமே... ஸ்கிட் பிளேட்டுகளின் டைமென்ஷன்கள் பெரிதாகி உள்ளன. 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள். பின் பக்கம் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை.

கேபினில் எதுவுமே மாறவில்லை. அதே டிசைன்தான். ஆனால், போர் அடிக்கவில்லை. பின் பக்க சீட்கள் அதே தாழ்வான பொசிஷனிலும், விண்டோ ஏற்றமாகவும்தான் இருக்கின்றன. உட்கார்ந்தால், பிக் பாஸ் வீடு போல் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவே இல்லை.

டாப் வேரியன்ட் SX(O) பழசைவிட 50,000 ரூபாய் அதிகம். வசதிகளும்தான். எலெக்ட்ரிக் சன்ரூஃப், பவர்டு டிரைவர் சீட், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் இன்டர்னல் ரியர்வியூ மிரர். ஹூண்டாயின் ஆட்டோலிங்க் ஆப் கனெக்ட்டிவிட்டியில் காரின் ஹெல்த், டிரைவிங் பேட்டர்ன், ரோடு சைடு அசிஸ்டன்ஸ் போன்றவற்றைப் பார்த்துக்கொள்ளலாம். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் டச் ஸ்கிரீனும் ரிவைஸ் செய்யப்பட்டுள்ளன. சாஃப்ட்வேரும்தான். ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே உண்டு. வெர்னாவில் இருக்கும் வென்டிலேட்டட் சீட், க்ரெட்டாவில் மிஸ்ஸிங். குழந்தைகள் பாதுகாப்பு வசதியான ISOFIX மவுன்ட் சீட், SX  ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் மட்டும்தான். டாப் வேரியன்ட்டில் SX (O) சைடு ஏர்பேக்ஸும், ESC-யும் (Electronic Stability Control) உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick