9 பேர் பயணிக்கலாம்! | Mahindra TUV300 Plus launched - Motor Vikatan | மோட்டார் விகடன்

9 பேர் பயணிக்கலாம்!

அறிமுகம் - TUV 300 ப்ளஸ்ராகுல் சிவகுரு

டந்த சில மாதங்களாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மஹிந்திரா டீலர்களில் காணப்பட்ட TUV 3OO ப்ளஸ், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிவிட்டது. ஆம், P4 - P6 - P8 எனும் 3 வேரியன்ட்கள் - 5 கலர்களில் களமிறங்கியிருக்கும் இந்த எஸ்யூவியின் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை, முறையே 9.6 லட்சம் - 9.96 லட்சம் - 11 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனது பெயருக்கு ஏற்ப, TUV 3OO எஸ்யூவியைவிட, 401 மிமீ கூடுதல் நீளத்தைக்கொண்டிருக்கிறது TUV 3OO ப்ளஸ்.  அகலம், உயரம், வீல்பேஸ் ஆகியவற்றில் பெரிய வித்தியாசமில்லை. 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட TUV 3OO காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளதால், சி-பில்லர் வரை இரண்டு எஸ்யூவிகளுமே ஒன்றுதான்; TUV 3OO ப்ளஸ் மாடலின் பின்பக்க வடிவமைப்பில் மாற்றம் தெரிகிறது. 3-வது வரிசையில் மடிக்கக்கூடிய இரண்டு Side Facing சீட்கள் இருப்பதால்,  9 பேர் பயணிக்கக்கூடிய எஸ்யூவியாக மாறியிருக்கிறது  TUV 3OO ப்ளஸ். இதில் 120bhp பவர் - 28kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் mHawk 120 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினில், தனது மைக்ரோ ஹைபிரிட், எக்கோ மோடு, பிரேக் எனர்ஜி ரீ-ஜெனரேஷன் சிஸ்டம் ஆகிய வசதிகளைச் சேர்த்துள்ளது மஹிந்திரா. 215/70 R16 சைஸ் வீல்கள்கொண்ட இந்த எஸ்யூவியின் கடைசி 2 வேரியன்ட்களில்தான், பாதுகாப்பு வசதிகள் (2 காற்றுப் பைகள், ABS, EBD) இடம் பெற்றுள்ளன. அதேபோல, டாப் வேரியன்ட்டில்தான் டச் ஸ்கிரீன் சிஸ்டம், அலாய் வீல்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்ஸார், கீலெஸ் என்ட்ரி, ரியர் வைப்பர், லெதர் சீட்ஸ் ஆகியவை உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick