சிட்டிக்கு செம... ஹைவேஸுக்கு..?

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹூண்டாய் எலீட் i20 CVTதொகுப்பு: ராகுல் சிவகுரு

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ - இங்குதான் தனது பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 காரைக் களமிறக்கியது ஹூண்டாய். இதில், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களில் எந்த வித்தியாசமும் இல்லையென்றாலும், ஆட்டோமேட்டிக் மாடலில் முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. முந்தைய i20 காரில் 1.4 லிட்டர் Kappa பெட்ரோல் இன்ஜின் – 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்த நிலையில், பேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் Kappa பெட்ரோல் இன்ஜின்– CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பை வழங்கியிருக்கிறது. இதற்கு அந்த மாடலின் அதிக விலை மற்றும் சில வசதிகள் (ABS, DRL, ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார் மற்றும் கேமரா, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, 7 இன்ச் டச் ஸ்கிரீன்) இல்லாமல் போனதே காரணம். Magna Executive & Asta எனும் இரு வேரியன்ட்களில் கிடைக்கும் i20 ஆட்டோமேட்டிக் மாடலை, காரின் டாப் வேரியன்ட்டான Asta (O)-வில் வழங்காதது நெருடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்