க்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்?

போட்டி - ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் VS மாருதி சுஸூகி இக்னிஸ் (டீசல்)தொகுப்பு: தமிழ்

‘டால்பாய் அளவுகோள்களுடன் க்ராஸ்ஓவர் நிலைப்பாடுடன் வடிவமைக்கப்பட்டது’ என்று இக்னிஸுக்கு விளக்கம் சொல்கிறது மாருதி. இதனுடன் போட்டி போட வேறு டால்பாய் கார்களைத் தேடினால், க்ராஸ்ஓவர்தான் சிக்குகிறது. அதில், ஃபோர்டின் ஃப்ரீஸ்டைல்தான் புது வரவு. இதை CUV என்கிறது ஃபோர்டு. அதாவது, ‘Compact Utility Vehicle’. ‘இரண்டுக்கும் போட்டி வெச்சா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று வாசகர்களிடம் இருந்து வந்த கமென்ட்டுகளைப் பரிசீலனை செய்து, இரண்டு டீசல் கார்களையும் கிளப்பினோம்.

உள்ளே...

ஃப்ரீஸ்டைல்:
கறுப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் இன்டீரியர், ஸ்போர்ட்டியா டல்லா என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். டேஷ்போர்டின் பாதி சாக்லேட் பிரவுன் கலரோடு, இன்னும் வேறு சில வண்ணங்களைக் கொடுத்திருக்கலாமோ? SYNC3 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சட்டென ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற பாப்-அப் சிஸ்டம் கொண்ட பிரீமியம் கார்களை நினைவுபடுத்திவிட்டது. அப்புறம்தான் தெரிந்தது - இதை டேஷ்போர்டின் உயரத்தில் நன்றாக பொசிஷன் செய்துள்ளார்கள். ஸ்டைலாகவும் இருக்கிறது. படிப்பதற்கு ஏதுவாகவும் இருக்கிறது. ஆனால், நேவிகேஷன் இருந்தால் நன்றாக இருக்கும். ரிவர்ஸ் கேமரா உண்டு. தரம், இக்னிஸைவிட சூப்பர். சீட்டிங் பொசிஷன் நன்கு உயரமாகவே இருப்பதால், உள்ளே போய் வர ஈஸியாக இருக்கிறது. லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், ஹைட் அட்ஜஸ்டபிள் சீட்ஸ், ஏர் வென்ட்களுக்கு குரோம் ஃபினிஷிங் என்று ஆங்காங்கே பிரீமியம் டச் செம.

பின் பக்கம் லெக்ரூம் ஓகே! ஹெட்ரூம் நினைத்ததுபோலவே உயரமானவர்களுக்கு தலை கூரையில் இடித்தது. ஃப்ரீஸ்டைலில் 257 லிட்டர் பூட் ஸ்பேஸ். வீக் எண்ட் டூர் அடிக்கலாம். இதற்காக, பின் பக்க சீட்களை மடித்துக் கொள்ளும் வசதி கொடுத்துள்ளார்கள். ஆனால், 60:40 விகிதத்தில் மடிக்க முடியாது.

இக்னிஸ்: நெக்ஸா ஷோரூமில் கிடைக்கும் விலை குறைந்த பிரீமியம் கார் இக்னிஸ். டூ-டோன் தீம் கொண்ட இன்டீரியர், கண்ணைப் பறிக்காத லைட் கலர்கள், ‘நைஸ்’ என்று சொல்லவைக்கிறது. ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன், சிலிண்டரிக்கல் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் என எல்லாமே யூத்ஃபுல். சில பாகங்கள் ஃபோர்டு அளவுக்கு தரம் என்று சொல்ல முடியவில்லை. ஆனால்,  ஒட்டுமொத்த தரம் ஓகே! லெக்ரூம், ஹெட்ரூம் எல்லாமே அசத்தல். ஆனால், கேபின் குறுகலாக இருப்பதால் ஃப்ரீஸ்டைல் அளவுக்கு மூன்று பேர் தாராளமாக உட்கார முடியவில்லை. ஜாலியான விஷயம் - கழுத்துக்கான அட்ஜஸ்டபிள் நெக்ரெஸ்ட் கொடுத்துள்ளார்கள். கதவில், சீட் பாக்கெட்டில், பாட்டில் வைக்க ஹோல்டர் என்று ஸ்டோரேஜ் ஸ்பேஸ் சூப்பர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick