நிறங்களில் உலகம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 7க.சத்தியசீலன்

நிறங்கள், தவிர்க்க முடியாத நிஜம். நம்மால் வண்ணங்களற்ற வாழ்க்கையை எண்ணிப் பார்க்க முடியாது. வண்ணங்கள், அறிவியலின் ஒரு நுண்ணியல் புலம். நாம் நிறங்களைப் புரிந்துகொள்ள விழைந்ததைவிட புறந்தள்ளியே வந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

பிறந்து கண் திறந்த நொடி முதல், வாழ்க்கையின் கடைசி நொடி வரை வண்ணங்களோடு நாம் தொடர்பில் இருக்கிறோம். உண்மையில் வண்ணங்கள் என்பவை பிரபஞ்சப் பொதுமொழி என்றுதான் சொல்ல வேண்டும். புவியையும் தாண்டி அண்டவெளிக் கிரகங்களைக்கூட சில சமயங்களில் அவற்றின் நிறங்களால்தான் வேறுபடுத்தி அடையாளம் கண்டு கொள்கிறோம்.

செவ்வாய் என்ற சிவந்த கிரகம் ஒரு நல்ல உதாரணம். அதேபோலத்தான் கடல்! அது தன்னுள் பல்வேறு நிறங்களாகக் காட்டுவது என்ன? வெவ்வேறு அளவுள்ள ஒளியின் துணுக்குகள்தான்! ஒளியில்லை என்றால், நிறமும் இல்லை. சூரிய ஒளிக்கற்றை, பல்வேறு தன்மையுள்ள பொருள்களில் பட்டுத் தெறிக்கும். தெறிக்கும் கீற்றுக்குக் குறிப்பிட்ட ஓர் அலைநீளம் இருக்கும். அதை நம் கண்கள் விதவிதமான நிறங்களாகப் பார்க்கும். நிறத்தைப் புரிந்துகொள்ளுவதென்பது ஒரு கருத்தைப் புரிந்துகொள்வதைப் போன்றது. அதாவது ‘பெர்செப்ஷன்’. ஆனால், நிறங்கள் வழியாகவே இயற்கை அன்னை நம்மோடு பேசுகிறாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick