இனி இல்லை... செக்போஸ்ட் தொல்லை! - 7

தொடர் / லாஜிஸ்டிக்ஸ்ரவிச்சந்திரன், டெபுட்டி மேனேஜிங் டைரக்டர், டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்

பெரிய ஷாப்பிங் ஸ்டோர்களில் ஒரு சிக்கல் உண்டு. பர்ச்சேஸ் எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால், வாங்கிய பொருட்களுக்கு பில் போடுவதற்குள், இன்னொரு பர்ச்சேஸிங்கே முடித்துவிடலாம். இங்கே பில் போடுவதற்கான நேரம்தான் பர்ச்சேஸிங் நேரத்தைவிட அதிகமாக இருக்கும். சாதாரண ஷாப்பிங்குக்கே இப்படி என்றால், லட்சங்களில் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாஜிஸ்டிக்ஸின் முதுகெலும்பான லாரித் தொழிலுக்குச் சொல்லவா வேண்டும்?

முன்பெல்லாம் ஒவ்வொரு செக்போஸ்ட்களிலும் ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’ எனும் இளையராஜா பாடல்தான் ஒலித்துக்கொண்டிருக்கும். கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நாள்கணக்கிலெல்லாம் லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு லாரிப் பயணம் 8 மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். அதாவது, ஓர் இரவு. ஆனால், சில லாரிகள் 4 நாட்களெல்லாம் காத்திருந்துதான் பொருட்களை டெலிவரி செய்திருக்கிறார்கள். காரணம், முறையான டாக்குமென்ட்கள் இல்லாதது மற்றும் மேனுவல் பிராசஸிங் முறை.   செக்போஸ்ட்களில் நெரிசலும் அதிகம்.

இப்போது அந்தச் சிக்கலுக்கு விடை கிடைத்துள்ளது. காரணம், ‘eWay பில்’. இந்த ஜூன் மாதத்திலிருந்து இந்த ‘eWay பில்’ நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு வகையில் இந்த ‘eWay பில்’ என்பது லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு வரமே என்று சொல்லலாம். எப்படி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick