ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் பின்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ்!

ஸ்பை போட்டோ - ராயல் என்ஃபீல்டு ராகுல் சிவகுரு

ப்ரல் 1, 2018 முதலாக விற்பனை செய்யப்படும் 125சிசி-க்கும் அதிகமான டூ-வீலர்களில் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் என்ற விதியை மத்திய அரசாங்கம் கடந்தாண்டு அறிவித்தது. இருப்பினும், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் டூ-வீலர்களில் ஏபிஎஸ் பொருத்துவதற்காக, ஏப்ரல் 1, 2019 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காகவே பல இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், தங்களின் புதிய தயாரிப்புகளை  2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வரிசையாக அறிமுகப்படுத்திவிட்டனர். இதில் ராயல் என்ஃபீல்டு பங்கேற்கவில்லை, அதேசமயம், தண்டர்பேர்டு மற்றும் ஹிமாலயன் பைக்கைத் தொடர்ந்து, கிளாஸிக் 500 சீரிஸ் பைக்குகளில் பின்பக்க டிஸ்க் பிரேக்கை ஸ்டாண்டர்டு அம்சமாக ஆக்கிவிட்டது. இது கிளாஸிக் 350 Gunmetal Grey பைக்கில் மட்டும் வழங்கப்பட்டாலும், புல்லட் சீரிஸில் இந்த  வசதி இடம்பெறவில்லை. ஆனால், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தனது பைக்குகளை மேம்படுத்தும் பொருட்டு, ஏபிஎஸ் அமைப்பை அவற்றில் சேர்க்க முடிவு செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

இதன்படி கிளாஸிக் மற்றும் தண்டர்பேர்டு சீரிஸ் பைக்கில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ்; ஹிமாலயன் மற்றும் புதிய 650 சிசி பைக்குகளில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick