ஆட்டோமேட்டட் பிரெஸ்ஸா!

விலை: ரூ 7.74 லட்ச ரூபாய் - 10.46 லட்ச ரூபாய் (சென்னை எக்ஸ்-ஷோரூம்)ஃபர்ஸ்ட் டிரைவ் - விட்டாரா பிரெஸ்ஸா AMTதொகுப்பு: ராகுல் சிவகுரு

காம்பேக்ட் எஸ்யூவிகளில் இது ஆட்டோமேட்டிக் காலம். ஆம்! கடந்த ஆண்டில் TUV3OO இந்த ட்ரெண்டைத் துவக்கிவைத்திருந்தாலும், பின்னர் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் - டாடா நெக்ஸான் என வரிசையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் சூடுபிடிக்கத் தொடங்கியது. எல்லாரும் பரபரப்பாக இருக்கும்போது, மாருதி சும்மா இருக்குமா என்ன? இதோ, விட்டாரா பிரெஸ்ஸாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வந்துவிட்டது.

90bhp பவர் மற்றும் 20kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் இணைக்கப்பட்டிருந்த 5 ஸ்பீடு கியர்பாக்ஸை அடிப்படையாகக் கொண்டே AMT கியர்பாக்ஸை தயாரித்திருக்கிறது மாருதி சுஸூகி. இந்த வகை கியர்பாக்ஸ்களில் பெரும் பிரச்னையாக இருந்த Jerkiness, இதில் பெருமளவு குறைந்திருக்கிறது. மேலும் Creep வசதி இருப்பது, நெரிசல்மிக்க டிராஃபிக்கில் பெரிய ப்ளஸ். தவிர, ஆக்ஸிலரேட்டரில் மிதமாக பலத்தைக் காட்டும்போது, எந்தவித இடர்பாடும் இல்லாமல் கியர்கள் ஸ்மூத்தாக மாறுகின்றன. ஆனால், திடீரென காரின் வேகத்தைக் கூட்ட முயற்சிக்கும்போது, தானாகவே சரியான கியருக்குச் செல்வதில் தாமதம் ஏற்படுவதை உணர முடிகிறது. மிட் ரேஞ்ச் அதிரடியாக இருப்பதால், 2,300 ஆர்பிஎம்மைத் தாண்டிய பிறகு ரெட்லைன் வரை பர்ஃபாமென்ஸ் நன்றாக இருக்கிறது. இந்நேரத்தில் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்பது நெருடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick