இந்த பென்ஸிடம் சூப்பர் கார்களே வெட்கப்படணும்!

ட்ராக் டிரைவ் - பென்ஸ் E63 AMG 4Matic+தமிழ்

சென்னை ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டியாச்சு? கோவை, பெங்களூருவில்கூட ஓகே! டெல்லி மட்டும்தான் பாக்கி! ‘டெல்லி புத் இன்டர்நேஷனல் டிராக்கில் கார் ஓட்ட வர்றீங்களா?’ என மெயில் தட்டியது பென்ஸ். வாவ்! வெட்டல் கடைசி சாம்பியன் ஆன டெல்லி ஃபார்முலா ட்ராக்... அதுவும் பென்ஸ் E63 AMG காரில் என்றால் சும்மாவா?

AMG என்றால், பென்ஸின் வேற லெவல் கார்கள்! அதாவது, ‘வ்வ்வ்ர்ர்ர்ரூம்’ கார்கள். நான் ஓட்டப் போகும் பென்ஸின் பவர் 602 bhp. சாதாரண கார்களைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம். 0-100 கி.மீ-க்கு வெறும் 3.3 விநாடிகளாம். ட்ராக்கில் வரிசையாக E63 AMG-யை நிறுத்தியிருந்தது பென்ஸ். ‘டெல்லி BIC டிராக் பற்றி ஒரு சின்ன முன்னோட்டம், முரட்டுத்தனமான பென்ஸை எப்படிக் கையாள வேண்டும்’ என்பது போன்ற டிப்ஸ் கொடுத்தார்கள் ஜெர்மன் ரைடர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick