மோட்டார் கிளினிக் | Motor Clinic - Motor Vikatan | மோட்டார் விகடன்

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

நான் நீண்ட நாட்களாக, ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், புதிதாக ஒரு பைக் வாங்க விரும்புகிறேன். ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X, பஜாஜ் டொமினார் D400, மஹிந்திரா மோஜோ UT 300 ஆகியவற்றில் எது எனக்கான சாய்ஸாக இருக்கும்?

- கலைச் செல்வன், கோயம்புத்தூர்.

ஏற்கெனவே விற்பனையில் இருந்த தண்டர்பேர்டு பைக்கின் மாடர்ன் அவதாரம்தான் தண்டர்பேர்டு 500X. எனவே, புதிய ஹேண்டில்பார் - அலாய் வீல்கள் - கலர் ஆப்ஷன் - சிங்கிள் பீஸ் சீட் - டியூப்லெஸ் டயர்களுடன் இது தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும், மெக்கானிக்கலாக ஒன்றுதான். அதுபோலவே, ஏற்கெனவே விற்பனையில் இருந்த மோஜோ பைக்கின் பட்ஜெட் வேரியன்ட்தான் UT 300. அதற்கேற்ப வழக்கமான XT 300 பைக்கில் இருந்த LED DRL, USD ஃபோர்க், பைரலி டயர்கள், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், இரட்டை எக்ஸாஸ்ட், தங்க நிற வேலைப்பாடுகள் ஆகியவை இங்கே மிஸ்ஸிங். இந்த ஆண்டின் துவக்கத்தில்தான், தனது பிரீமியம் பைக்கான டொமினாரை, புதிய கலர் ஆப்ஷன்களில் களமிறக்கியது பஜாஜ். உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் LED ஹெட்லைட் உடன் வரும் டொமினார், உங்களுக்கு ஏற்ற பைக்காக இருக்கும் எனத் தோன்றுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick