இந்திய பாதுகாப்புத் துறையில் டிவிஎஸ்!

சாதனைடிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்தமிழ்

மீபத்தில் சென்னையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சியில் அசோக் லேலாண்டு துவங்கி டிவிஎஸ் வரை பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்றன. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் கேந்திரமாக இந்தியாவை  மாற்றும் திட்டத்தோடு செயல்பட்டு வரும் மத்திய அரசு, 2025 ஆண்டு வாக்கில் 1,70,000 கோடி ரூபாய் அளவுக்கு இதில் விற்று முதலீடு இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ‘ இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும்;  இந்தியாவுக்காக உற்பத்தி செய்ய வேண்டும்; உலகுக்காகவும் உற்பத்தி செய்ய வேண்டும்’ என்ற லட்சிணை வாக்கியத்தை உண்மையாக்க வேண்டுமானால், ‘சப்ளை செயின் மெனேஜ்மெண்ட்’ என்பது எந்த அளவு முக்கியம் என்பதை பிரதமர் இந்த கண்காட்சியில் அடிகோடிட்டு விளக்கினார்.

இந்தத் துறையில் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் கில்லி. சிவிலியன் ஏரியாவில் மட்டுமல்ல, ராணுவ செயல்பாட்டிலும் இந்த நிறுவனத்துக்கு அனுபவம் உண்டு. ஆம், டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸின் துணை நிறுவனமான TVS SCS நிறுவனம் இங்கிலாந்து நாட்டின் ராணுவ அமைச்சகத்தோடு திறம்பட பணிபுரிந்து வருகிறது. டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸின் சேவையால் இங்கிலாந்து ராணுவம் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவுகளை மிச்சப்படுத்துகிறது.  டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸின் இந்த அனுபவமும் திறமையும் இந்திய ராணுவத்துக்கு எப்படியெல்லாம் பயன்படும் என்பதை நம் நாட்டின் உயர் ராணுவ அதிகாரிகள் இந்தக் கண்காட்சியின் போது ஆவலோடு கேட்டறிந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick