இனி குழப்பம் இல்லை!

ஃபர்ஸ்ட் டிரைவ் - பஜாஜ் டிஸ்கவர் 110தொகுப்பு: தமிழ்

‘டிஸ்கவரில் எத்தனை வேரியன்ட்’ என்று கேள்வி கேட்டால், குழம்பிவிடுவோம். அதனால், இப்போது இரண்டே இரண்டு மாடல்களை மட்டும் டிஸ்கவரில் வைத்திருக்கிறது பஜாஜ். 110 மற்றும் 125 சிசி. கம்யூட்டர்களுக்கு 100, 110சிசி மேல்தான் எப்போதுமே ஒரு கண். காரணம் - விலை, மைலேஜ். ஆல் டைம் ரன்னிங் லைட் சட்டத்துக்குப் பிறகு, எல்லா பைக்குகளும் DRL-களுடன் வர ஆரம்பித்துவிட்டன. புதிய அனலாக்-டிஜிட்டல் டயல்கள் நீட்டாக இருக்கிறது. மற்றபடி டிசைனில் பெரிய மாற்றங்களெல்லாம் இல்லை. இன்ஜின் 115.45 சிசி, ஏர்கூல்டு, சிங்கிள் சிலிண்டர். 8.6bhp பவரும், 0.98 kgm டார்க்கும் இந்த பைக்குக்கு ஓகேதான். டிஸ்கவரில் ஒரு ஜாலியான விஷயம். 20 கி.மீ வேகத்தில் டாப் கியரில் போனால்கூட, தடதடத்து இன்ஜின் ஆஃப் ஆகவில்லை. அப்படியே ரைடிங்கைத் தொடரலாம். 50 கி.மீயைத் தாண்டினால், இன்ஜின் ரொம்ப உற்சாகமாகிறது. டாப் ஸ்பீடு 96 கி.மீ வரை விரட்டினேன். டிஸ்கவர் 125 ஓட்டுவதுபோல்தான் தெரிந்தது. ஆனால், 125 சிசியில் 5 கியர்கள். இதில் 4 தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick